Morning Quotes : உங்கள் நாளை நேர்மறையாக துவங்கவேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த 8 விஷயங்கள் உதவும்!
- Morning Quotes : உங்கள் நாளை நேர்மறையாக துவங்கவேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த 8 விஷயங்கள் உதவும்!
- Morning Quotes : உங்கள் நாளை நேர்மறையாக துவங்கவேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த 8 விஷயங்கள் உதவும்!
(1 / 8)
அதிகாலையில் துயில் எழுவது - அதிகாலையில் துயில் எழுவது உங்களுக்கு சாதித்துவிட்ட உணர்வைத் தரும். அது உங்களுடைய நாளை பரபரப்பாக்காமல் பொறுமையாக எழுந்து சிறப்பாக செயல்பட உதவுகிறது. இந்த நாளை மகிழ்ச்சியானதாகவும், நிறைவானதாகவும் மாற்ற நீங்கள் அதிகாலையில் எழுவது அவசியம். எனவே அதிகாலையில் விழித்து எழுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்தால் அந்த நாள் உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு சமம் என்பார்கள். அத்தனை வேலைகளை உங்களால் செய்யமுடியும். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.
(2 / 8)
நன்றி - நன்றியுணர்வுடன் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் நன்றியுடன் நடந்துகொள்ளவேண்டிய மூன்று விஷயங்களை எழுதுங்கள். காலையில் அந்த விஷயங்கள் உங்கள் வேலைகளில் தெரியுமாறு உங்கள் நாளை துவங்குங்கள். அந்த நாள் நேர்மறையாகத் துவங்கும். அதே நல்ல மனநிலையுடன் நன்றாக நகரட்டும்.
(3 / 8)
உடற்பயிற்சி - சில விரைவான உடற்பயிற்சிகள், உடலுக்கு கொடுக்கும் அசைவுகள், நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு வகையிலான உடற்பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். இந்த அதிகாலை பயிற்சி உங்களின் மனநிலை மற்றும் ஆற்றல் நிலை இரஆண்டையும் அதிகரித்துக்காட்டும். எனவே அந்த நாளே உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.
(4 / 8)
ஆரோக்கியமான காலை உணவு - உங்களின் காலை உணவுதான் உங்களின் ஒட்டுமொத்த நாளுக்கான ஆற்றலைத் தருகிறது. எனவே காலை உணவில் கவனம் தேவை. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு என்பது மிகவும் அவசியம். எனவே காலையில் நல்ல சத்தான ஆகாரத்தை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிறப்பான நாளுக்கு, செயல்மிகுந்த நாளுக்கு, நாள் முழுவதும் திருப்தியாக இருக்க உங்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு அவசியமாகிறது.
(5 / 8)
குறிக்கோள்களை வகுத்துக்கொள்ளுங்கள் - ஒவ்வொரு காலையையும் திட்டத்துடன் அமைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களின் முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இது உங்களை கவனத்துடன் செயல்பட அனுமதிக்கும். உங்களை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளும்.
(6 / 8)
மனநிறைவு மற்றும் தியானம் - ஒவ்வொரு நாளும் தியானம் செய்வதற்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்களுக்கு அமைதியைத்தரும். மனஅழுத்தத்தை குறைக்கும். உங்களின் கவனத்தை மேம்படுத்தும், உங்களுக்கு தெளிவைத்தரும். உங்களின் நாளை நேர்மறையானதாக மாற்றும்.
(7 / 8)
நல்லவற்றை படியுங்கள் அல்லது கேளுங்கள் - அதிகாலையில் நீங்கள் கேட்கும் விஷயங்கள் உங்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். நல்ல ஆடியோவைக் கேளுங்கள். அது உங்கள் மனநிலையை மாற்றும். அது உங்களுக்கு தேவையான உற்சாகத்தை தரும்.
மற்ற கேலரிக்கள்