தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Miss World 2024, Krystyna Pyszkova Representing Czech Republic Wins Crown

Miss World 2024: 71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு இளம்பெண்..இவர் யார் தெரியுமா?

Mar 10, 2024 08:21 AM IST Karthikeyan S
Mar 10, 2024 08:21 AM , IST

  • 71ஆவது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டி இதுவாகும்.

மும்பையில் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.

(1 / 6)

மும்பையில் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.(ANI)

உலக அழகி போட்டியில் லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஆச்சே ஆபிரகாம்ஸ்,  போட்ஸ்வானாவின் லெசெகோ சோம்போ மற்றும் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் டாப் 4 போட்டியாளர்களாக தேர்வாகினர்.

(2 / 6)

உலக அழகி போட்டியில் லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஆச்சே ஆபிரகாம்ஸ்,  போட்ஸ்வானாவின் லெசெகோ சோம்போ மற்றும் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் டாப் 4 போட்டியாளர்களாக தேர்வாகினர்.( (Instagram/@missworld))

இதில், 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.இவர் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை எதிர்த்து போட்டியிட்டார். 

(3 / 6)

இதில், 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.இவர் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை எதிர்த்து போட்டியிட்டார். ( (Instagram/@missworld))

இந்த போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உலகி அழகிப் பட்டம் வென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா கிறிஸ்டினாவுக்கு மகுடம் சூட்டி கவுரவித்தார்.

(4 / 6)

இந்த போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உலகி அழகிப் பட்டம் வென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா கிறிஸ்டினாவுக்கு மகுடம் சூட்டி கவுரவித்தார்.( (Instagram/@missworld))

24 வயதாகும் கிறிஸ்டினா பிஸ்கோவா, மாடலாக இருந்து வருகிறார். மேலும், சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் டிகிரி படித்து வருகிறார்.

(5 / 6)

24 வயதாகும் கிறிஸ்டினா பிஸ்கோவா, மாடலாக இருந்து வருகிறார். மேலும், சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் டிகிரி படித்து வருகிறார்.

இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சினி ஷெட்டி என்ற பெண், லெபனான் அழகி யாஸ்மினிடம் தோல்வியடைந்து பாதியிலேயே வெளியேறினார்.

(6 / 6)

இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சினி ஷெட்டி என்ற பெண், லெபனான் அழகி யாஸ்மினிடம் தோல்வியடைந்து பாதியிலேயே வெளியேறினார்.( (Instagram/@missworld))

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்