மாணவர்களோடு உட்கார்ந்து காலை டிபன் சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி!
- சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்.
- சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்.
(1 / 7)
சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
(2 / 7)
மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர உதயநிதி ஸ்டாலின் சமையல் செய்யும் இடத்தை பார்வையிட்டார்.
(3 / 7)
உணவின் தரம், சுவை, உணவு வரும் நேரம், மாணவர்கள் வரவர அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.
(6 / 7)
இது தொடர்பாக அவர் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.. அதில், "சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளிக்கு இன்று காலை சென்று மாணவர்களுடன் சிற்றுண்டி உண்டு, முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தோம். உணவின் தரம், சுவை, உணவு வரும் நேரம், மாணவர்கள் வரவர அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்ற கேலரிக்கள்