Udayabhanu Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ’உச்சத்தில் ஏற்றி எதிரிகளை ஓடவிடும் உதயபானு யோகம் யாருக்கு?’-mesham rasi to meenam rasi discover udayabhanu yogam and its powerful impact and who benefits most - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Udayabhanu Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ’உச்சத்தில் ஏற்றி எதிரிகளை ஓடவிடும் உதயபானு யோகம் யாருக்கு?’

Udayabhanu Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ’உச்சத்தில் ஏற்றி எதிரிகளை ஓடவிடும் உதயபானு யோகம் யாருக்கு?’

Aug 09, 2024 11:00 AM IST Kathiravan V
Aug 09, 2024 11:00 AM , IST

  • Udayabhanu Yogam: ஒரு ஜாதகர் உயர்நிலை யோக்கிதை அடைய படிப்படியாக ஒரு மனிதனை அழைத்து சென்று நல்ல பரோபகார சிந்தனை, தெய்வ பக்தி, உடல் ஆரோக்கியம், திடமான மனம், அரசு,பதவி, முன்னேற்றம், புகழ், பொருளாதாரம் ஆகியவற்றை தரும் யோகமாக இந்த உதயபானு யோகம் உள்ளது.

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம், சேர்க்கை உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் உண்டாகும் ஒரு யோகங்களில் ஒன்றாக உதயபானு யோகம் குறிப்பிடப்படுகின்றது.

(1 / 8)

ஒரு ஜாதகர் உயர்நிலை யோக்கிதை அடைய படிப்படியாக ஒரு மனிதனை அழைத்து சென்று நல்ல பரோபகார சிந்தனை, தெய்வ பக்தி, உடல் ஆரோக்கியம், திடமான மனம், அரசு,பதவி, முன்னேற்றம், புகழ், பொருளாதாரம் ஆகியவற்றை தரும் யோகமாக இந்த உதயபானு யோகம் உள்ளது.

(2 / 8)

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும், ராசி அதிபதியும் உங்கள் ராசியில் உச்சம் ஆக இருக்க வேண்டும் என்பது இந்த யோகத்தின் முதல் விதியாக உள்ளது.

(3 / 8)

லக்னாதிபதியும், ராசி அதிபதியும் இணைந்த நிலையில், யாரோ ஒருவர் உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகும்.

(4 / 8)

ராசி கட்டத்தில் யாரும் உச்சம் பெறவில்லை, ஆனால் நவாம்ச கட்டத்தில் உச்ச வீடுகளில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் உண்டாகும்.

(5 / 8)

உதாரணமாக மீன லக்னம், கும்ப ராசியை எடுத்துக் கொள்வோம். மீன லக்னத்தின் அதிபதியாக குரு பகவானும், கும்ப ராசியின் அதிபதியாக சனி பகவானும் உள்ளனர். இவர்கள் இருவரும் உச்சம் பெற்றால் நேரடியாக உதயபானு யோகம் உண்டாகும்.

(6 / 8)

அதே மீன லக்னம், கும்ப ராசியில் குரு மட்டுமே உச்சம் பெற்று சனி பகவான் குரு பகவான் உடன் இணைந்து இருந்தாலும் உதயபானு யோகம் உண்டாகும். உதாரணமாக மீன லக்னம், கும்ப ராசியை எடுத்துக் கொள்வோம். உங்கள் லக்ன அதிபதியும், ராசி அதிபதியும் நவாம்ச கட்டத்தில் ராசி அதியான சனி பகவான் துலாம் ராசியில் இருந்தாலோ, அல்லது லக்னாதிபதியான குரு பகவான் கடகம் ராசியில் இருந்தாலும் இந்த யோகம் உண்டாகும்.

(7 / 8)

மேலும் இவர்கள் இருவரும், தங்களுக்குள் பரிவர்தனை பெற்று யாரேனும் ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்றாலும் இந்த யோகம் உண்டாகும். எடுத்துக்காட்டாக ஒரு ரிஷப லக்னம், தனுசு ராசியை எடுத்து கொள்வோம். லக்ன அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருக்கிறார். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று உள்ளார். லக்னாதிபதி, ராசி அதிபதி வலுப்பெற்று இருந்தாலும் உதயபானு யோகம் உண்டாகும். லக்ன அதிபதியும், ராசி அதிபதியும் வலுத்துவிட்ட ஒரு ஜாதகத்திற்கு அனைத்தும் கிடைக்கும் என்பதில் ஆச்சரியபடுவதற்கு எதுவும் இல்லை. 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்