கதவை திறந்த இளையராஜா.. நன்றியோடு பிரிந்த உயிர்.. கண்ணீர் வடித்த மகள்! - மலேசியா வாசுதேவன் இறந்த கதை!
அவரால் பெரிதாக பேசமுடியவில்லை.எங்களைப் பார்த்தவுடன் அவரது கண்ணில் கண்ணீர் வந்தது. அவர் அழுவதை பார்த்த உடன் எங்களுக்கும் அழுகை வந்தது. ஆனால் நாங்கள் அதை அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை. -
(1 / 6)
கதவை திறந்த இளையராஜா.. நன்றியோடு பிரிந்த உயிர்.. கண்ணீர் வடித்த மகள்! - மலேசியா வாசுதேவன் இறந்த கதை!
(2 / 6)
மலேசியா வாசுதேவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்த காலம் குறித்து, அவரின் மகளான பிரியதர்ஷினி ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
(3 / 6)
இது குறித்து அவர் பேசும் போது, “ அப்பாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு, கோமாநிலைக்குச் செல்வதற்கு முன்னதாக சிறிது காலம் சுயநினைவோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது நாங்கள் எல்லோரும் அவரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது, அவரால் பெரிதாக பேசமுடியவில்லை.எங்களைப் பார்த்தவுடன் அவரது கண்ணில் கண்ணீர் வந்தது. அவர் அழுவதை பார்த்த உடன் எங்களுக்கும் அழுகை வந்தது; ஆனால் நாங்கள் அதை அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை.
(4 / 6)
காரணம், நாமும் அந்த இடத்தில் அழுது கொண்டிருந்தால், அவர் இன்னும் சங்கடப்பட்டு, அவரின் உடல்நிலை மோசமாவதற்கான வாய்ப்பு இருந்தது. அதனால் நாங்கள் ஆறுதல் சொல்லி நீங்கள் மீண்டு வந்து விடுவீர்கள் என்று கூறினோம். ஆனால், எங்களுடைய துர்திஷ்டம் அவர் அதன் பின்னர் வரவே இல்லை. ஆனால், அவரது உயிர் மட்டும் இருந்து கொண்டிருந்தது. அந்த உயிர் ராஜா சாருக்காக காத்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.
(5 / 6)
அவர் வந்த பொழுதுதான், அவரது உயிர் அவரை விட்டுச் சென்றது. அப்பா உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு ராஜா சார் மருத்துவமனைக்கு வந்தார். அப்பா இருந்த ரூமின் கதவை திறந்து அவர் உள்ளே வந்த உடன், அவரது உயிர் பறிபோனது.
(6 / 6)
ராஜா சார் வாசு என்றெல்லாம் கூப்பிட்டு பார்த்தார். ஆனால், அவர் எழுந்திருக்கவே இல்லை. ராஜா சாரின் முன்னிலையில் தான் அவரது முகத்தில் வைக்கப்பட்டிருந்தடியூப் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது அதை எங்களால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. நான் அப்பாவிற்கு மிகுந்த செல்லம்; அதனால் அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்ற கேலரிக்கள்