October 2024: துலாம் ராசியில் நீசம் ஆகும் சூரியன் முதல் நவராத்திரி வரை! அக்டோபரில் நிகழும் முக்கிய கிரக மாற்றங்கள்!-major october 2024 events planetary transits mahalaya amavasya solar eclipse navratri dussehra more - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  October 2024: துலாம் ராசியில் நீசம் ஆகும் சூரியன் முதல் நவராத்திரி வரை! அக்டோபரில் நிகழும் முக்கிய கிரக மாற்றங்கள்!

October 2024: துலாம் ராசியில் நீசம் ஆகும் சூரியன் முதல் நவராத்திரி வரை! அக்டோபரில் நிகழும் முக்கிய கிரக மாற்றங்கள்!

Sep 30, 2024 08:37 PM IST Kathiravan V
Sep 30, 2024 08:37 PM , IST

  • அக்டோபர் 10ம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார்.

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வேத ஜோதிடத்தின்படி, அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையில் மாற்றம் ஏற்பட உள்ளது. 

(1 / 8)

அக்டோபர் 10ம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சூரியன் நீசம் பெறுவதால் அக்டோபர் மாத பிற்பகுதியில் மக்களுக்கு பொருளாதாரம், உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சனைகளும், வேலையில் தடைகள் ஏற்படும்.

(2 / 8)

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 3 ஆம் தேதி நிகழும். ஆனால், இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.

(3 / 8)

அக்டோபர் 09-ஆம் தேதி அன்று ரிஷபம் ராசியில் இருக்கும் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். அக்டோபர் 13ஆம் தேதி சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 

(4 / 8)

அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 03 ஆம் தேதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைகிறார். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை நாட்டின் 12 ராசிகளையும் பாதிக்கும். அக்டோபர் மாதம் மக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை ஜோதிடரிடம் தெரிந்து கொள்ளுங்கள்-

(5 / 8)

மேலும் அக்டோபர் 3ஆம் தேதி அன்று நவராத்திரி தொடங்குகின்றது. அக்டோபர் 11ஆம் தேதி அன்று சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 12ஆம் தேதி அன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றது.

(6 / 8)

மேலும் அக்டோபர் 3ஆம் தேதி அன்று நவராத்திரி தொடங்குகின்றது. அக்டோபர் 11ஆம் தேதி அன்று சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 12ஆம் தேதி அன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றது.(I STOCK)

வரும் அக்டோர்பர் மாதம் 2ஆம் தேதி அன்று மஹாளய அமாவாசை ஏற்படுகின்றது. மஹாளய பட்சம் என்பது முன்னோர்கள் வழிபாட்டில் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தி தரும் என்பது மக்களின் நம்பிக்கை  ஆகும். 

(7 / 8)

 இதே நாளில் தசரா திருவிழா வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது. கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை குலசேகரப்பட்டினம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தசரா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும்.

(8 / 8)

 இதே நாளில் தசரா திருவிழா வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது. கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை குலசேகரப்பட்டினம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தசரா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும்.(Photo by Sakib Ali /Hindustan Times)

மற்ற கேலரிக்கள்