Money Luck: கிரகங்களில் நிகழும் மாற்றம்..! பிப்ரவரி மாதம் பணம், அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்
- பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கிரகநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் நிலைகள் மாறப்போகிறது. இதனால் நான்கு ராசியினருக்கு பனமழை கொட்டப்போவதுடன், அதிர்ஷ்டமழையும் தொடங்குகிறது
- பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கிரகநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் நிலைகள் மாறப்போகிறது. இதனால் நான்கு ராசியினருக்கு பனமழை கொட்டப்போவதுடன், அதிர்ஷ்டமழையும் தொடங்குகிறது
(1 / 5)
பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே புதனின் ராசி மாற்றம் நிகழ்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் ராசியில் மாற்றமும், பிப்ரவரி 12ஆம் தேதி வெள்ளியில் ராசி மாற்றமும் நிகழ்கிறது. சூரியனின் அதிபதி கும்ப ராசியில் நுழைகிறார். ஜோதிட சாஸ்திரப்படி சூரியன், புதன், வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை மிக முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன
(2 / 5)
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் லாபகரமாக இருக்கும். சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். எங்காவது முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை
(3 / 5)
கடகம்: நான்கு முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நல்ல காலமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக லாபம் அடைவீர்கள். தேவைப்படும் பணம் கையில் இருக்கும்
(4 / 5)
தனுசு: பிப்ரவரி மாதம் மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் நன்மைகள் உண்டாகும். தொழில் ரீதியாக வெற்றியை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. துரித உணவை தவிர்க்கவும்
(5 / 5)
மகரம்: சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்
மற்ற கேலரிக்கள்