2024 இல் மனதில் நின்ற டாப் ஹீரோயின்கள்! அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டவர்களின் லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2024 இல் மனதில் நின்ற டாப் ஹீரோயின்கள்! அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டவர்களின் லிஸ்ட் இதோ!

2024 இல் மனதில் நின்ற டாப் ஹீரோயின்கள்! அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டவர்களின் லிஸ்ட் இதோ!

Dec 24, 2024 06:30 AM IST Suguna Devi P
Dec 24, 2024 06:30 AM , IST

  • ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு உயர்ந்து வருகிறது எனக் கூறலாம். அதற்கு இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான உதாரணம் ஆகும். இந்த ஆண்டில் வெளியான படங்களில் காதநாயகிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

தமிழ் திரையுலகில் 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 150 படங்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் வெகு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அது போல இந்த ஆண்டில் மறக்க முடியாத ஹீரோயின்களாக இருந்தவர்கள் என்றால் சிலர் உள்ளனர். அவர்களின் பட்டியலை இங்கு காண்போம். 

(1 / 9)

2024 ஆம் ஆண்டு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த சிறந்த கதாநாயகிகள் பட்டியலை எடுத்துக் கொண்டாலும், அதில் நிச்சயமாக தங்கலானின் கங்கம்மாளிற்கு முதன்மையான இடம் தான் கொடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகை பார்வதி திருவோத்து இப்படத்தின் வாயிலாக ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். மிகவும் நேர்த்தியான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளார் இந்த கங்கம்மா. 

(2 / 9)

சாதியம், ஆணாதிக்கம் என அத்தனை அடக்கு முறைகளுக்கும் அரை கூவல் விடும் அடங்கா பிடாரி பெண் தான் கொட்டுக்காளி மீனா, படம் நெடுக வசனம் ஏதும் இல்லாமல் அவரது கண்கள் வழியாகவே அவளது வலியையும், வைராக்கியத்தையும் காட்டி விட்டு போகிறாள்.தமிழ் சமூகத்தின் கிராமங்களில் நடக்கும் ஆணாதிக்க சமூகத்தின் மீது விழுந்த பேரிடி தான் மீனா மாதிரியான பெண்கள். மீனாவை கொட்டுக்காளியாக நமக்கு தந்த இயக்குனர் வினோத் ராஜிற்கு பாராட்டுக்கள். 

(3 / 9)

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்துவின் லப்பர் பந்து படத்தில் வந்த யசோதையின் சாயல் தான் நமது வீடுகளில் உள்ள கோபக்கார அம்மாக்களிடம் இருக்கிறது. அனைத்து விதமான அடக்கு முறை உள்ள சமூகத்தில் இருந்து வந்தே சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிறார். கணவனின் மீது கொண்ட தீரா காதலால் அவன் செய்யும் தவறுகளை மன்னிக்கும் போதும், கண்டிக்கும் போதும் அப்படியே நம் வீட்டு பெண்களை கண் முன் கொண்டு நிறுத்துகிறார் சுவாசிகா. இதுவரை கவனிக்கப்படாமல் இருந்த சுவாசிகாவிற்கு லப்பர் பந்து ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். 

(4 / 9)

எங்கள் பள்ளிக்கும் பூங்கொடி டீச்சர் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அன்பான, அழகான ஆசிரியரக வந்தார் நிகிலா விமல். இவரின் சிறப்பான நடிப்பால் அந்த காதப்பத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். இன்னும் பல சிவனைந்தான்கள் உருவாகி கொண்டு தான் இருக்கிறார்கள். பூங்கொடி டீச்சர்களும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  

(5 / 9)

நடிகை கீர்த்தி சுரேசின் திரைப்பயணத்தில் இந்த ஆண்டு வெளியான ரகுதாத்தா ஒரு பெரிய மைல் கல்லாக இருக்கும். இந்தி திணிப்பிற்கு எதிராகவும், ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவு வெடித்து சிதறும் பட்டாசை வந்து சென்றால் க பாண்டியன் எனும் கயல்விழி பாண்டியன். முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் பெண், வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போதும், தன்னை போல ஒரு முற்போக்கு ஆணை திருமணம் செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் போதும், அதே ஆண் ஒரு ஆணாதிக்க வாதி என தெரிந்த பின் எதிர்த்து நிற்கும் போதும் என படம் நெடுக கயல்விழியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளார். 

(6 / 9)

லவ்வர் படத்தில் திவ்யாவாக கல்லூரி காலத்தில் தவறுதலாய் விழுந்த டாக்சிக் காதலில் சிக்கித் தவிக்கும் தற்கால இளம் பெண்ணாக நடிகை கௌரி பிரியா கச்சிதமாக பொருந்தி இருப்பார். ஒவ்வொரு முறையும் அருண் திருப்பி வாய்ப்பு கொடுக்குமாறு கெஞ்சும் போது ஒரு தர்மசங்கடத்தில் சிக்கித் தவிப்பது, இந்த டாக்சிக் காதல் வேண்டாம் என்று தீர்க்கமாக முடிவெடுப்பது என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்து இருப்பார். இவரும் 2024 ஆம் ஆண்டின் மறக்க முடியாத ஒரு ஹீரோயின் ஆக உள்ளார். 

(7 / 9)

தமிழ் ரசிகர்களுக்கு வதந்தி வெப் தொடர் மூலம் அறிமுகமான நடிகை சஞ்சனா, லப்பர் பந்து படத்தில் துர்கா கதாப்பத்திரத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். அன்புவின் மீதான ஆக்கிரமிப்பு இல்லாத காதல், அப்பா கெத்துவின் மீதான நம்பிக்கை என அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்துள்ளார். சில்லான் சிறுக்கியாக தமிழ் இளைஞர்களின் மனதை திருடி விட்டார்.   

(8 / 9)

அமரன் படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகவே நடித்த சாயபல்லவி பலரது பாராட்டையும் பெற்றார். அந்த காதப்பத்திரத்திற்கு உயிர் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்டு விட்டார். படத்தின் இறுதி காட்சியில் அழுகாமல் அனைவரையும் அழுக வைத்து விடுகிறார்.  

(9 / 9)

மற்ற கேலரிக்கள்