CSK vs RCB Match Records: கோலி, தோனி, ஜடேஜா..! சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் நிகழ்த்த இருக்கும் சாதனைகள் என்ன ?
- ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நிகழ்த்தப்பட இருக்கும் சாதனைகள் எவை என்பதை பார்க்கலாம்
- ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நிகழ்த்தப்பட இருக்கும் சாதனைகள் எவை என்பதை பார்க்கலாம்
(1 / 8)
ஐபிஎல் போட்டியில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த மோதலாக இருந்து வரும் சிஎஸ்கே - ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் சில சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது
(2 / 8)
விராட் கோலிக்கு இன்றைய போட்டியில் மூன்று சாதனைகள் நிகழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. 6 ரன்கள் அடிப்பதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் என்ற மைல்கல்லை அடையும் 6வது வீரராக இருப்பார். 15 ரன்கள் அடித்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 1000 ரன்கள் அடிக்கும் வீரர் ஆவார். 7 பவுண்டரிகளை விளாசினால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 650வது அடிக்கும் வீரர் என்ற பெருமையை பெறுவார்
(3 / 8)
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கோலி அரைசதமடித்தால் அந்த அணிக்கு எதிராக 10வது அரைசதமடிக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்
(4 / 8)
கோலி போல் ரவீந்திர ஜடேஜாவும் மூன்று சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. ஒரு சிக்ஸரை பறக்கவிட்டால் ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்களில் சதமடிப்பார் ஜடேஜா. அதேபோல் 7 பவுண்டரி அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் 200வது பவுண்டரியை அடித்த ஆல்ரவுண்டர் ஆவார். 3 கேட்ச்களை பிடித்தால் ஐபிஎல் போட்டிகள் 100 கேட்ச்கள் பிடித்த வீரர் லிஸ்டில் இணைவார்
(5 / 8)
பவுலிங்கிலும் ஜடேஜா மற்றொரு சாதனை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது, 2 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் ஆர்சிபிக்கு எதிராக 28 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்த பவுலர் என்ற பெருமையை பெறுவார்
(6 / 8)
கேப்டன்சியில் இருந்து விலகி விட்டபோதிலும் விக்கெட் கீப்பராக பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் எம்எஸ் தோனி. அந்த வகையில் இன்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தால் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார்
(7 / 8)
சிக்ஸர்கள் லிஸ்டில் கோலி, ஜடேஜா போல் அஜிங்கியா ரஹானேவும் சாதனைக்கு அருகில் உள்ளார். 4 சிக்ஸர்கள் அடிப்பதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 100வது சிக்ஸ் மைல்கல்லை ரஹானே அடைவார்
மற்ற கேலரிக்கள்