இனப்பெருக்க ஆரோக்கியம் - பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இனப்பெருக்க ஆரோக்கியம் - பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்!

இனப்பெருக்க ஆரோக்கியம் - பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்!

Apr 14, 2022 02:51 AM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 14, 2022 02:51 AM , IST

  • மோசமான உணவுப்பழக்கம், எடை அதிகரிப்பு, மனஅழுத்தம், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் இனப்பெருக்கத்தில் பாதிப்புகள் உண்டாகிறது. எனவே இனப்பெருக்க சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியமாகிறது.

பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நலனிலும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சில அவசியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் எஸ்டிஐ எனப்படும் பாலியல் மூலம் பரவும் தொற்றுக்கள், எச்ஐவி/எய்ட்ஸ், ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம். எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை அகப்படலம்), பிஎஸ்ஓஎஸ் (சினைப்பை நீர்கட்டி), மலட்டுதன்மை, நீர்கட்டிகள், திசுக்களில் கட்டிகள், பெண்ணுறுப்புகளில் புற்றுநோய், இதர மாதவிடாய் கோளாறு போன்ற சில நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் ஒருவரது நிலை மேலும் மோசமடையலாம். பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தை பேனிக்காக்க பிரபல மகப்பேறு மருத்துவர் ஷாலினி விஜய் தரும் யோசனைகள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்

(1 / 7)

பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நலனிலும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சில அவசியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் எஸ்டிஐ எனப்படும் பாலியல் மூலம் பரவும் தொற்றுக்கள், எச்ஐவி/எய்ட்ஸ், ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம். எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை அகப்படலம்), பிஎஸ்ஓஎஸ் (சினைப்பை நீர்கட்டி), மலட்டுதன்மை, நீர்கட்டிகள், திசுக்களில் கட்டிகள், பெண்ணுறுப்புகளில் புற்றுநோய், இதர மாதவிடாய் கோளாறு போன்ற சில நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் ஒருவரது நிலை மேலும் மோசமடையலாம். பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தை பேனிக்காக்க பிரபல மகப்பேறு மருத்துவர் ஷாலினி விஜய் தரும் யோசனைகள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்(Pixabay, Pexels)

புகைப்பிடிப்பதை தவிர்த்தல்: சீகரெட் புகைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், அதில் கலக்கப்பட்டுள்ள நச்சு நிறைந்த பொருள்கள் அதன் மீதான போதையை அதிகரிக்கிறது. புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகளை உருவாக்கிறது. குறிப்பாக பெண்கள் புகைப்பிடிப்பதனால் அவர்களின் கருப்பை, இனப்பெருக்க உறுப்புகளின் இதர பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கின்றன என பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதுவும் கர்ப்ப காலத்தில் புகைப்பிடித்தால் பிறக்கும் குழந்தைக்கு பிறவியிலேயே குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது

(2 / 7)

புகைப்பிடிப்பதை தவிர்த்தல்: சீகரெட் புகைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், அதில் கலக்கப்பட்டுள்ள நச்சு நிறைந்த பொருள்கள் அதன் மீதான போதையை அதிகரிக்கிறது. புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகளை உருவாக்கிறது. குறிப்பாக பெண்கள் புகைப்பிடிப்பதனால் அவர்களின் கருப்பை, இனப்பெருக்க உறுப்புகளின் இதர பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கின்றன என பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதுவும் கர்ப்ப காலத்தில் புகைப்பிடித்தால் பிறக்கும் குழந்தைக்கு பிறவியிலேயே குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது(Pixabay)

அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வது: பரிசோதனை செய்து கொள்வதன் அவசியத்தை உங்கள் வயது உணர்த்தும். பெண்களின் கருப்பை வாயில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதையும், பாலியல் மூலம் தொற்றுக்கள் எதுவும் பரவியுள்ளதா என்பதையும் உறுதிபடுத்தும் பரிசோதனைகளை தவறாமல், தயங்காமல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கூறியது போன்ற நிலை உருவனால் அதை எதிர்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும் செய்யலாம்

(3 / 7)

அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வது: பரிசோதனை செய்து கொள்வதன் அவசியத்தை உங்கள் வயது உணர்த்தும். பெண்களின் கருப்பை வாயில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதையும், பாலியல் மூலம் தொற்றுக்கள் எதுவும் பரவியுள்ளதா என்பதையும் உறுதிபடுத்தும் பரிசோதனைகளை தவறாமல், தயங்காமல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கூறியது போன்ற நிலை உருவனால் அதை எதிர்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும் செய்யலாம்(Pixabay)

பாதுகாப்பான உடலுறவு: உங்கள் துணையுடன் பாதுகாப்பான உடலுறவை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் தொற்று பரவலை தடுக்கலாம். எச்ஐபி தொற்று பாதிக்கப்பட்டால் உங்கள் வாழ்க்கையே புரட்டிபோட்டது போல் மாறிவிடும். எனவே உடலுறவுக்கு முன் உங்களது துணையை பாதுகாப்பாக உள்ளாரா என்பதை உறுதி செய்துகொள்ளவும்

(4 / 7)

பாதுகாப்பான உடலுறவு: உங்கள் துணையுடன் பாதுகாப்பான உடலுறவை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் தொற்று பரவலை தடுக்கலாம். எச்ஐபி தொற்று பாதிக்கப்பட்டால் உங்கள் வாழ்க்கையே புரட்டிபோட்டது போல் மாறிவிடும். எனவே உடலுறவுக்கு முன் உங்களது துணையை பாதுகாப்பாக உள்ளாரா என்பதை உறுதி செய்துகொள்ளவும்(Unsplash)

மாதவிடாய் சுகாதாரம்: மாதவிடாய் நேரங்களில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு 4 முதல் 5 மணி நேரத்து ஒருமுறை பேட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மாதவிடாயின் போது ஏதேனும் மாற்றங்களை கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்

(5 / 7)

மாதவிடாய் சுகாதாரம்: மாதவிடாய் நேரங்களில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு 4 முதல் 5 மணி நேரத்து ஒருமுறை பேட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மாதவிடாயின் போது ஏதேனும் மாற்றங்களை கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்(Pexels)

உடலுக்கு வசதியான ஆடை அணிதல்: இறுக்கமான ஆடைகள் அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் உங்கள் பிறப்புறுப்பில் அசெளகரியங்களை ஏற்படுத்தலாம். இனப்பெருக்க பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதோடு, நீர்த்தாரை செலுத்துவதை தவிர்க்கவும். வேதிப்பொருள்கள், சோப்புகள் பயண்படுத்துவதை தவிர்க்கவும். உடலின் அங்கங்களின் முன் மற்றும் பின் பகுதியை நன்கு சுத்தப்படுத்திக்கொள்ளவும். உள்ளாடைகளை காற்று புகும் விதமாக துணியில் அணிந்துகொள்ளவும்

(6 / 7)

உடலுக்கு வசதியான ஆடை அணிதல்: இறுக்கமான ஆடைகள் அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் உங்கள் பிறப்புறுப்பில் அசெளகரியங்களை ஏற்படுத்தலாம். இனப்பெருக்க பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதோடு, நீர்த்தாரை செலுத்துவதை தவிர்க்கவும். வேதிப்பொருள்கள், சோப்புகள் பயண்படுத்துவதை தவிர்க்கவும். உடலின் அங்கங்களின் முன் மற்றும் பின் பகுதியை நன்கு சுத்தப்படுத்திக்கொள்ளவும். உள்ளாடைகளை காற்று புகும் விதமாக துணியில் அணிந்துகொள்ளவும்(Pexels)

சமச்சீரான உணவு முறையை கடைப்பிடித்தல்: இவ்வாறு செய்வதன் மூலம் சீரான எடையை பெறலாம். தலைவலி, இனிப்பு சாப்பிடும் எண்ணம், தலைசுற்றல், ரத்த சர்க்கரை அளவு குறைவு போன்றவற்றை எதிர்கொள்ள மக்னீசியம் தேவைப்படுகிறது. அதேபோல் மாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் சோர்வு, மனஅழுத்தங்களை போக்க கால்சீயம் உதவுகிறது. எனவே இவை இரண்டும் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்

(7 / 7)

சமச்சீரான உணவு முறையை கடைப்பிடித்தல்: இவ்வாறு செய்வதன் மூலம் சீரான எடையை பெறலாம். தலைவலி, இனிப்பு சாப்பிடும் எண்ணம், தலைசுற்றல், ரத்த சர்க்கரை அளவு குறைவு போன்றவற்றை எதிர்கொள்ள மக்னீசியம் தேவைப்படுகிறது. அதேபோல் மாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் சோர்வு, மனஅழுத்தங்களை போக்க கால்சீயம் உதவுகிறது. எனவே இவை இரண்டும் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்(Pixabay)

மற்ற கேலரிக்கள்