ஆளி விதைகள் உடலுக்கு தரும் 5 நன்மைகள்!
- பிசிஓஎஸ் (சினைப்பை நீர்க்கட்டி) இருப்பவர்களுக்கு நன்மை தரும் ஆளி விதைகள், ஹார்மோன்கள் சமநிலை அடையவும், எடை குறைப்புக்கும் உதவுகிறது. இதேபோல் உடல் ஆரோக்கியத்தில் ஆளிவிதைகள் தரும் 5 முக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
- பிசிஓஎஸ் (சினைப்பை நீர்க்கட்டி) இருப்பவர்களுக்கு நன்மை தரும் ஆளி விதைகள், ஹார்மோன்கள் சமநிலை அடையவும், எடை குறைப்புக்கும் உதவுகிறது. இதேபோல் உடல் ஆரோக்கியத்தில் ஆளிவிதைகள் தரும் 5 முக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
(1 / 6)
சமீப காலமாக ஆளி விதைகளை பலரும் வாங்கி பல்வேறு வகைகளில் சாப்பிடும் போக்கு அதிகரித்துள்ளது. ஆளி விதைகளை நேரடியாகவும், பொடியாகவும், மாத்திரைகளாகவும், மாவு வகை உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். இது நீரழிவு பாதிப்பை தடுத்து, அதிக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இதய நோய், புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.பிசிஓஎஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆண்களின் ஹார்மோன்கள் அதிகம் உற்பத்தியாகும் பிரச்னை உண்டாகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் ஹார்மோன்களை சீர்செய்ய உதவுகிறது. ஆளிவிதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து உள்ளிட்ட அதிகமாக உள்ளது. தொடர்ந்து இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்கிறது(Shutterstock, Pinterest)
(2 / 6)
ஊட்டச்சத்துகள் நிறைந்தது: ஆளிவிதைகளில் நிரம்பியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள், புரதம் உள்பட பல ஊட்டச்சத்துகள் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது(Pixabay)
(3 / 6)
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது: ஆளி விதைகளில் ஒமேகா 3, ஆல்பா லினேலேனிக் அமிலம் உள்பட ஏராளமான பல்நிறைவுராத கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆளி விதைகளை வைத்து சட்னி தயார் செய்து அதை பரோட்டாவுடனும் இணைந்து சாப்பிடலாம்(Pinterest)
(4 / 6)
இதிலுள்ள அதிகப்படியான லிக்னான்கள் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது. ஆண் ஹார்மோன்கள் சுரப்புகளை கட்டுப்படுத்தி உடலில் பல்வேறு இடங்களில் முடி வளர்வதையும் தடுக்கிறது. ஆளிவிதைகளை பொடியாக்கி நீங்கள் தயார் செய்யும் சாலட்களில் தூவியும், ஸ்மூத்தி, தானியங்கள் ஆகியவற்றிலும் தூவியும் சாப்பிடலாம்(Pinterest)
(5 / 6)
அதிகப்படியான நார்ச்சத்து: நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள் அதிகமாக இருப்பதால் இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது(Instagram)
மற்ற கேலரிக்கள்