குரு 2025 ஜாக்பாட்.. பண மூட்டைகளை அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. விவாதம் செய்ய வேண்டாம்!
- Guru Bhagavan: குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணிக்க தொடங்கினார். வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
- Guru Bhagavan: குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணிக்க தொடங்கினார். வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
இந்நிலையில் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிரநிலையில் பயணிக்க தொடங்கினார். வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் குருபகவான் இரண்டாவது வீட்டில் வக்கிரன் நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நல்ல பொருள் மற்றும் இன்பங்கள் கிடைக்கப்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்