சனிபகவானால் சிக்கி தவிக்க போகும் மிதுன ராசி.. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்!
Saturn: சனிபகவானால் கஷ்டப்படப் போகும் மிதுன ராசி குறித்து காண்போம்.
(1 / 8)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய சனிபகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 8)
கர்மவினைகளை இவர் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 8)
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 8)
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆனார் ஒரு மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பிரச்சனை வரப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
(5 / 8)
மிதுனம்: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறையான காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 8)
மிதுனம்: உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. செலவுகளால் கவலைகள் ஏற்படக்கூடும்.
(7 / 8)
மிதுனம்: வேலை செய்யும் இடத்தில் அதிக சவால்கள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகள் ஏற்படும்.
(8 / 8)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்