Kulasai Dasara: கோலாகலமாக நடைபெற்ற மகிஷா சூரசம்ஹாரம் - பக்தர்கள் பக்தி பரவசம்!
- குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிக சிறப்பாக நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
- குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிக சிறப்பாக நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
(1 / 10)
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழா, தசரா திருவிழாவாக மைசூருக்கு அடுத்தப்படியாக ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
(2 / 10)
இந்தாண்டு தசரா பெருந்திருவிழா செப்.26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
(3 / 10)
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று (அக்.5) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
(4 / 10)
தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மகிஷா சூரமர்தினி கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்ய கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
(5 / 10)
கடற்கரையில் அமைக்கபட்டிருந்த முதல் பந்தலில் நள்ளிரவு 12.05 மணிக்கு தனது முகத்துடன் இருந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார்.
(6 / 10)
பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்ற மகிஷாசூரனை இரண்டாம் பந்தலில் நள்ளிரவு 12.11 மணிக்கு அம்மன் வதம் செய்தார்.
(7 / 10)
தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூரனை 3ஆம் பந்தலில் நள்ளிரவு 12.18 மணிக்கு முத்தாரம்மன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தாா்.
(8 / 10)
முடிவில் சேவல் உருவமாக மாறிய மகிஷாசூரனை நான்காம் பந்தலில் நள்ளிரவு 12.24 மணிக்கு வதம் செய்தார் முத்தாரம்மன். இதனை கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்று விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கமிட்டனர்.
(9 / 10)
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வழக்கத்தை விட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினத்தில் குவிந்திருந்தனர்.
மற்ற கேலரிக்கள்