Shenbagavalli Amman temple: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shenbagavalli Amman Temple: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்

Shenbagavalli Amman temple: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்

Oct 20, 2022 03:16 PM IST Karthikeyan S
Oct 20, 2022 03:16 PM , IST

  • கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாண பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழமை வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சியே நடந்து வருகிறது. சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

(1 / 8)

வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பக பாண்டியன் எனும் மன்னன் இக்கோயிலை எழுப்பியதால் இக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு செண்பகவல்லி என்ற பெயர் வந்ததாகவும் , 'கோவிற்புரி' என அந்த மன்னன் உருவாக்கிய இந்நகரே பின்னாளில் திருமங்கை நகராகி கோவில்பட்டி என்றானதாகவும் சொல்லப்படுகிறது.

(2 / 8)

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு, நவராத்திரி, பங்குனி திருவிழா ஆகிய முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு, இத்திருவிழா கடந்த 11ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் திருநாளான நேற்று (அக்.19) தேரோட்டம் நடந்தது.

(3 / 8)

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவனந்தல் பூஜை, உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

(4 / 8)

இதைத்தொடர்ந்து அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

(5 / 8)

கோயிலில் இருந்து புறப்பட்டு தேர் ரதவீதிகள் வழியாக மேளதாளம் முழங்க காலை 11.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா நடந்தது.

(6 / 8)

திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைப்பிரியா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

(7 / 8)

தோரோட்டத்தையொட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்