Kidney Stone Symptoms: இந்த அறிகுறிகளில் ஏதாவது உங்களுக்கு உள்ளதா? கிட்னியில் கல் இருக்கலாம்! இத ஃபாலோ பண்ணுங்க!
- ”Kidney Stone Symptoms: சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது”
- ”Kidney Stone Symptoms: சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது”
(1 / 9)
சர்க்கரை நோயை போலவே பலரும் சிறுநீரக கற்கள் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயிற்று வலி அதிகமாகி மருத்துவரிடம் சென்று உடலை சோதித்த பிறகுதான் பலருக்கும் கிட்னியில் கற்கள் இருக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.
(2 / 9)
சிறுநீரகக் கற்களின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று முதுகு, பக்கம் அல்லது அடிவயிற்றில் ஏற்படும் வலி. இந்த வலி நாளடைவில் உடலின் இடுப்பு பகுதி அல்லது பிறப்புறுப்புகளுக்கு பரவும் தன்மை கொண்டது.
(3 / 9)
சிறுநீரக கற்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல் சிறுநீரில் ரத்த கசிவு (ஹெமாட்டூரியா) உண்டாகுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாக உள்ளது.
(4 / 9)
சிறுநீரக கற்களுடன் தொடர்புடைய கடுமையான வலி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியைத் தூண்டுகிறது.
(5 / 9)
சில சமயங்களில் சிறுநீரக கற்கள் காய்ச்சலை ஏற்படுத்தும், இது சிறுநீர் பாதையில் தொற்று அல்லது அடைப்பு ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது.
(6 / 9)
சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது.
(7 / 9)
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை வீக்கத்தைக் குறைக்கவும் சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
(8 / 9)
கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும். இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.(Freepik)
(9 / 9)
அதிக சோடியம் கொண்ட உணவுகளைஉட்கொள்வது உட்கொள்ளவது சிறுநீரகத்தில் கல் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக குறைந்த சோடியம் உள்ள மாற்று உணவுகளை உண்பது அவசியம், உப்பு குறைவான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கல் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்