இந்திய சந்தையில் களமிறங்கிய கியா Ev6 எலெக்ட்ரிக் கார்களின் மாடல்கள் & அம்சங்கள்
- கியா EV6 எலெக்ட்ரிக் கார்கள் 77.4 kWh திறன் கொண்ட பேட்டரி, WLTP சான்று அளிக்கப்பட்ட வரம்பான (ஐரோப்பிய தரநிலை) ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் வசதியை கொண்டுள்ளது.
- கியா EV6 எலெக்ட்ரிக் கார்கள் 77.4 kWh திறன் கொண்ட பேட்டரி, WLTP சான்று அளிக்கப்பட்ட வரம்பான (ஐரோப்பிய தரநிலை) ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் வசதியை கொண்டுள்ளது.
(1 / 9)
கியா இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் வகை கார்களான GT RWD மற்றும் AWD என்ற வெர்ஷன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது
(2 / 9)
கியா EV6 வகை கார்களின் ஆரம்பகட்ட விலை ரூ.59.95 லட்சமாகவும், டாப் அமசங்கள் கொண்ட கார்கள் ரூ. 64.96 லட்சமாகவும் உள்ளன. இவை இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலைகளாக உள்ளது
(3 / 9)
கியா நிறுவனத்தில் E-GMP எனப்படும் எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்பார்ம் என்பதை அடிப்படையாகக் கொண்ட முதல் எலெக்ட்ரிக் கார்களாக கியா EV6 உள்ளது. பல்வேறு விதமாக வெளிப்புற பாடி மற்றும் கேபின் ஸ்டைல்களை வடிவமைத்துக்கு கொள்ளும் வசதியை கொண்டுள்ள இந்த கார்கள் இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. CBU எனப்படும் முழுமையாக வடிவமைக்கப்பட்ட 100 கார்கள் தற்போது விற்பனைக்கு உள்ளதாக கூறப்படுகிறது
(4 / 9)
கியா EV6 கார்களின் முக்கிய அம்சங்களாக டிஜிட்டல் டைகர் நோஸ் கிரில், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், எல்இடி ஹெட் லைட் மற்றும் டெயில் லைட் யூனிட்கள், ஸ்டைலான அலாய் டிசைன்கள் உள்ளன. இந்தியாவுக்கான மாடல்களில் என தனித்துவமாக 170 mm அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வருகிறது. இது வெளிநாட்டில் விற்கப்படும் மாடல்களை காட்டிலும் மாறுபாடாகவே உள்ளது
(5 / 9)
கியா EV6 டிசைன்கள் கலவையான அமசங்களுடன் கூடிய ஸ்டைலிஷ் புரொபைலை கொண்டதாக உள்ளது. எஸ்யூவி வகை கார்களின் டிசைன் மற்றும் பாடி டைப்-ஐ கொண்டாக அமைந்துள்ளது
(6 / 9)
ஏற்கனவே கியா EV6 எலெக்ட்ரிக் கார்களின் புக்கிங் 355 யுனிட்களாக உள்ளது. இதன் முதல்கட்ட டெலிவரி இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்குகிறது
(7 / 9)
கியா EV6 கார்களின் கேபின் மிதப்பது போன்ற உணர்வை தரும் விதமாக அமைந்துள்ளது. இதன் கேபின் பகுதிகள் பட்டுப் போன்ற நிலையான ஆதரங்களில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
(8 / 9)
கியா EV6 கார்களின் முதல் இரண்டு சீட்கள் பூஜ்ஜிய ஈர்ப்புடன் கூடிய சாய்வு செயல்பாடு அமைப்பை கொண்டுள்ளது. பனோரமா வியூவுடன் கூடிய சன்ரூஃப் கிளாஸ், ஏராளமான சார்ஜிங் வசதிகள், சுற்றுப்புற விளக்குகள், பின் பகுதி சீட்டின் கீழே உங்களது தனிப்பட்ட கேட்ஜெட்களை சார்ஜ் செய்வதற்கான பவர் அவுட்லெட் போன்றவற்றை கொண்டதாக உள்ளது
மற்ற கேலரிக்கள்