தெலுங்கு பெண்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டு தலைமறைவான நடிகை கஸ்தூரி.. ஐதராபாத்தில் வைத்து கைது செய்த காவல்துறை!
- தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வயில் பேசிய நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையல் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைதுசெய்தனர்.
- தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வயில் பேசிய நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையல் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைதுசெய்தனர்.
(1 / 7)
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே சமீபத்தில் அந்தணர்கள் சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, ‘’ஒவ்வொரு இடத்திலும் அவன் இவனை ஒடுக்கினான். இவன் அவனை ஒடுக்கினான் என புனைந்துவிட்டுட்டாங்க. வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்னு சொன்னது வெள்ளையர்களை இல்லை. ஐயர், ஐயங்காரை தான். ஆனால், இதில் சிலர் மாறி நாங்களும் பொய் சொல்வோமேன்னு போய் நிற்கிறாங்க. இறைச்சி சாப்பிடுவேன்னு சொல்றது எல்லாம் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்த துருப்பிச்சீட்டை எடுத்துத்தருவது மாதிரி தான்.
(2 / 7)
நம்ம அந்தணர் இனத்தை இழிவுபடுத்தினார் என்றால், அடிவருடி, சொம்புன்னு சொன்னதாகச் சொன்னார்கள். என் நிலையை எல்லாம் யோசிச்சுப் பாருங்க. நேராக ஒரு விஷயம் தான். ஏனென்றால், பெண்ணாகப் போய்விட்டேன், நடிகையாகப் போய்விட்டேன். அவங்க சொல்ற வார்த்தை திராவிடியா தனத்தைவிட கொச்சையான வார்த்தையொன்றும் கிடையாது. அப்படியே சொன்னாலும் என் சுய உழைப்பைப் போட்டு செய்யிறேன்னு சந்தோஷமாக சொல்லிட்டுப் போயிடுவேன். உன்னை மாதிரி பிளவுவேலை செய்து, மாமா வேலை செய்யிறதை விட, என்னுடைய வேலை பரவாயில்லை என்று சொல்வேன்.
(3 / 7)
இந்த விவகாரத்தில் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரி மீது திருச்சியிலும் 3 பிரிவுகளின் கீழ் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேனி மாவட்டம் - ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
(4 / 7)
இந்த நிலையில் கஸ்தூரி சென்னை போயஸ் கார்டனில் இருந்த வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார். கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
(5 / 7)
தெரியாமல் தான் கேட்கிறேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு, ராஜாக்களுக்குக் கூட சேர்த்துக்கிட்ட அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கு பேசினவர்கள் எல்லாம், இன்றைக்கு தமிழ் எங்கள் இனம் என்றுசொல்லும்போது, எப்போவோ வந்த பிரமாணர்களைத் தமிழர்கள் இல்லையென்று சொல்ல நீங்கள் யாருங்க. அதனால் தானே, தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கமுடியவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் நான்கு வருடங்கள் இருக்கிறேன். நீங்கள் எல்லாம் திராவிடர்களா அப்படின்னு தெலுங்னு மொழிபேசும் நபர்களிடம் கேட்கும்போது, என்னது என கேள்வி கேட்குறாங்க. உங்களைவிட நன்கு தெலுங்கு பேசுறவங்க தமிழ்நாட்டில் இருக்காங்க. 5 அமைச்சர்கள் இருக்கிறாங்க அப்படின்னு சொன்னேன். உடனே, ஹைதராபாத் காரங்க சந்தோஷமாகப் பார்க்கிறாங்க.
(6 / 7)
இந்நிலையில் கஸ்தூரி ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது. (https://twitter.com/KasthuriShankar)
மற்ற கேலரிக்கள்