Karungali Malai: எதிரிக்கே திரும்பும் கண் திருஷ்டி; கட்டம் போட்டு காக்கும் கருங்காலி மாலை - அப்படி என்ன ஸ்பெஷல்?
கருங்காலி மாலையின் அபரிவிதமான பயன்களை இங்கு பார்க்கலாம்!
(1 / 5)
கருங்காலி மாலையை பயன்படுத்துவதில் இங்கு பலருக்கும் பல குழப்பங்கள் இருக்கிறது. கருங்காலி மாலையை ஆண் பெண் என இரு தரப்பினருமே பயன்படுத்தலாம். எல்லா நாட்களுமே இந்த கருங்காலி மாலையை பயன்படுத்தலாம். கருங்காலி மாலையை கழுத்தில் அணிவதால் கிடைக்கக்கூடிய முக்கிய பயன் கண் திருஷ்டியை இது போக்கும்.
(2 / 5)
மனிதர்கள் மற்றவரிடம் இருக்கக்கூடிய, தன்னிடம் இல்லாத குணத்தையோ, பொருளையோ, உடல்நலத்தையோ பார்த்து பொறாமை கொள்வார்கள். அந்தப் பொறாமையானது கண் திருஷ்டியாக மாறும். அந்த கண்திருஷ்டி சம்பந்தப்பட்ட நபரை பாதிக்கும். இப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இந்த கருங்காலி மாலையை அணிய வேண்டும்.
(3 / 5)
இதை நீங்கள் வெளியே தெரியும்படியும் போடலாம். கழுத்தை ஒட்டியும் அணிந்து கொள்ளலாம். இந்த கருங்காலி மாலையை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது, எதிர்தரப்பிலிருந்து உங்கள் மீது ஒரு கண் திருஷ்டி அல்லது நெகட்டிவ் எனர்ஜி வருமாயின் அதிலிருந்து இந்த கருங்காலி மாலை உங்களை பாதுகாத்து அந்த கண் திருஷ்டியை திருப்பி அனுப்பி விடும்
(4 / 5)
கெட்ட சக்தி உலாவி கொண்டிருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால், இந்த கருங்காலி மாலை அதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் எதிர்மறையாகவே சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும், எப்போதுமே உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கிறது என்றாலும் நீங்கள் இந்த மாலையை அணியலாம்.
மற்ற கேலரிக்கள்