Kallakurichi Liquor Death: ’கள்ளக்குறிச்சி மரண ஓலம்!’ கள்ளச்சாராய சாவுகள் குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
(1 / 9)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை கூறி உள்ள கருத்துகள் குறித்த விவரம் இதோ!
(2 / 9)
மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
(3 / 9)
இப்படிப்பட்ட மரணம் நடக்க காரணம் விடியா திமுக முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மையே காரணம். இதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். நிர்வாக திறன் அற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.” - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
(4 / 9)
நடந்த சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை, இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பாதிக்கப்பட்டவர்கள் உயிரை காக்க முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம். இதன் பின்னணியில் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை உண்டு- அமைச்சர் எ.வ.வேலு
(5 / 9)
கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
(6 / 9)
கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.” - அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
(7 / 9)
ஏழை மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
(8 / 9)
போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என முதல்வர் சொன்னார். ஆனால் இன்று 38 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அரசு என்ன செய்கிறது? - அன்புமணி ராமதாஸ்
மற்ற கேலரிக்கள்