தினமும் பாதாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள் என்ன?
- தினமும் பாதாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள் என்ன?
- தினமும் பாதாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள் என்ன?
(1 / 9)
புரதச்சத்துக்கள் நிறைந்தது - 100 கிராம் பாதாமில் 21.15 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தசைகளுக்கு வலு கொடுக்கிறது. உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. பாதாமை தினமும் காலையில் சாப்பிடுவது உங்கள் தசைகளுக்கு வலு கொடுக்கிறது. தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
(2 / 9)
நல்ல கொழுப்பு - பாதாம் நல்ல கொழுப்புகள் நிறைந்த ஒரு உணவாகும். 100 கிராம் பாதாமில் 49.42 கிராம் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளது. இதில் மோனோசாச்சுரேடட் கொழுப்புகள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கொழுப்புகள் கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்க உதவுகின்றன. உங்கள் இதயத்தின் வடிவத்தை பராமரிக்கிறது.
(3 / 9)
நார்ச்சத்துக்கள் நிறைந்தது - பாதாமில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் பாதாமில் 12.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது குடலு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஊறவைத்த பாதாம்கள் மிருதுவாகவும், செரிக்க எளிதாகவும் இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(4 / 9)
வைட்டமின் இ - பாதாமில் வயோதிகத்துக்கு எதிரான வைட்டமின் இ சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் பாதாமில் 25.63 மில்லிகிராம் வைட்டமின் இ சத்துக்கள் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த வைட்டமின் சரும செல்கள் சேதமடையாமல் காக்கிறது. சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்கிறது. உங்கள் சருமத்துக்கு பளபளப்பைத் தருகிறது. உங்களுக்கு இளமை தோற்றத்தைக் கொடுக்கிறது.
(5 / 9)
மெக்னீசியச் சத்துக்கள் நிறைந்தது - மனஆரோக்கியத்தை அதிகரிக்கும் மெக்னீசியச் சத்துக்கள் பாதாமில் அதிகம் உள்ளது. 100 கிராம் பாதாமில் 268 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. மெக்னீசியல் தசைகளை ஆற்றுப்படுத்துகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. ஒற்றைத் தலைவலி போன்றவற்றை குணப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயை போக்குகிறது.
(6 / 9)
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது - பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல்களை சேதமாகாமல் பாதுகாத்து, புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. மற்ற நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.
(7 / 9)
இதயத்துக்கு ஊட்டமளிக்கிறது - பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் இ மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் என அனைத்தும் சேர்ந்து உங்கள் இதயத்துக்கு ஆற்றல் தருகிறது. தினமும் ஊறவைத்த பாதாம்களை சாப்பிடுவது உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகறிது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
(8 / 9)
உடல் எடை பராமரிப்பு - 100 கிரதம் பாதாமில் 576 கலோரிகள் உள்ளது. இது ஆற்றல் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதில் கலோரிகள் இருந்தாலும், அது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. பசியை குறைக்கிறது. அதிக உணவு உட்கொள்வதை தடுக்கிறது. உடல் எடையை கண்காணிப்பவர்களுக்கு சிறந்தது.
மற்ற கேலரிக்கள்