தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Balu Mahendra: சுடுசொல் சொன்ன நாக்கு.. துடிதுடித்து இறந்து போன ஷோபா.. நரகத்தில் உதித்த உன்னத படைப்பு! - பாலு மறுபக்கம்!

Balu Mahendra: சுடுசொல் சொன்ன நாக்கு.. துடிதுடித்து இறந்து போன ஷோபா.. நரகத்தில் உதித்த உன்னத படைப்பு! - பாலு மறுபக்கம்!

May 28, 2024 11:06 AM IST Kalyani Pandiyan S
May 28, 2024 11:06 AM , IST

Balu mahendra:  அவர் முதல் மனைவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இரண்டாவது மனைவியாக ஷோபாவை ஏற்றுக் கொண்டு, அவருடனும் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு இரவு ஷோபாவுக்கும், பாலுவுக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது- பாலு மறுபக்கம்

Balu Mahendra: சுடுசொல் சொன்ன நாக்கு.. துடிதுடித்து இறந்து போன ஷோபா.. நரகத்தில் உதித்த உன்னத படைப்பு! - பாலு மறுபக்கம்!

(1 / 6)

Balu Mahendra: பாலுமகேந்திரா - ஷோபா காதல் கதை குறித்து பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.காதல் மோகம்அவர் பேசும் போது, “எல்லாவற்றிலும் அதீத தன்மையோடு இருப்பவனால்தான் கலைஞன் ஆக முடியும். ஷோபாவை பாலு மகேந்திரா அறிமுகப்படுத்தினார். அவரை பாதுகாப்பதற்காக அவர் சில விஷயங்களை செய்தார். அந்த சமயத்தில் அவருக்கு திருமணம் ஆகி இருந்த பொழுதும், ஷோபாவின் மீது, அவரது மனம் வசப்பட்டு விட்டது.  

(2 / 6)

இருப்பினும், அவர் முதல் மனைவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இரண்டாவது மனைவியாக ஷோபாவை ஏற்றுக் கொண்டு, அவருடனும் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு இரவு ஷோபாவுக்கும், பாலுவுக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. அது என்னவென்றால் ஷோபா பாலுவை, நீங்கள் உங்களது முதல் மனைவியை விட்டுக் கொடுத்து விடுங்கள். நீங்கள் முழுக்க முழுக்க எனக்கு சொந்தமாக வேண்டும் என்றார்.  

(3 / 6)

அகதி பாலுமகேந்திராபாலு, ஈழத்திலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்தவர். அப்போது இந்தியாவில் அவருக்கான சூழல் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். இந்த நிலையில் தான் ஷோபாவிடம் பாலு மகேந்திரா, ஒருத்தியை கரம் பிடித்து விட்டு உன்னை காதலித்ததே தவறு. அப்படி ஒரு தவறு நிகழ்ந்திருக்கும் பட்சத்தில், நான் அவளை கைவிட்டால் எப்படி மனசாட்சி இடம் கொடுக்கும் என்று கேள்வி கேட்டார். ஆனாலும், ஷோபா விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக நின்றார். தொடர்ந்து, நீங்கள் உங்களது முதல் மனைவியை தேடி போனீர்கள் என்றால், இங்கே நடப்பதே வேறு என்று சொல்லி ஆரம்பித்து விட்டார். பாலு மகேந்திரா அதை கண்டுகொள்ளாமல், அந்த இரவு முதல் மனைவியின் வீட்டிற்கு சென்றார். அந்த இரவு ஷோபா தன்னுடைய வீட்டில் துயரம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

(4 / 6)

கொலையாக மாறிய தற்கொலைஅப்போது திரைத்துறையில் பாலு மகேந்திரா செலுத்திக் கொண்டிருந்த ஆதிக்கம் என்பது யாராலும் நிரப்ப முடியாததாக இருந்தது. இந்த நிலையில் அந்த ஆளுமையை வெல்ல முடியாதவர்கள், அவரை களங்கப்படுத்த வேண்டும் என்று இந்த தற்கொலையை, கொலையாக மாற்றி விட்டார்கள். விஷயம் பெரிய பூதாகரமாக மாறிவிட்டது. பாலுமகேந்திராவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். 

(5 / 6)

அங்கு அவருக்கு காவல்துறை மூலம் சித்திரவதைகளும் அரங்கேற்றப்பட்டன. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர் மன அழுத்தத்திலேயே இருந்தார். அவை அனைத்தையும் சேர்த்து வைத்துதான் அவர் மூன்றாம் பிறை படத்தை எடுத்தார். மூன்றாம் பிறை படத்தில் கிளைமாக்ஸ் -ல்  தன்னை விட்டு செல்லும் ஸ்ரீதேவியை பார்த்து கமல்ஹாசன் வெளிப்படுத்தும் ஆற்றாமையும், தவிப்பும் ஷோபா பாலுமகேந்திராவை விட்டுச் செல்லும் பொழுது, அவருக்கு நிகழ்ந்தது. அதைத்தான் அவர் காட்சியாக வைத்தார்.” என்று பேசினார்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்