Kushboo Politics: பாஜகவில் இருக்கும் பார்ப்பன ஆதிக்கம்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட குஷ்பு.. ஆனால்’ - பாண்டியன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kushboo Politics: பாஜகவில் இருக்கும் பார்ப்பன ஆதிக்கம்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட குஷ்பு.. ஆனால்’ - பாண்டியன்!

Kushboo Politics: பாஜகவில் இருக்கும் பார்ப்பன ஆதிக்கம்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட குஷ்பு.. ஆனால்’ - பாண்டியன்!

Feb 11, 2024 03:08 PM IST Kalyani Pandiyan S
Feb 11, 2024 03:08 PM , IST

குஷ்பு ஜோடி சேர்ந்த பெரும்பான்மையான கதாநாயகர்கள் அரசியல் பாதிப்பு உள்ளவர்களாக இருந்தார்கள். இதனால் அப்பொழுதே குஷ்பு, இறுதியாக நம் தஞ்சம் அடையப்போவது அரசியலில் தான் என்பதை முடிவு செய்து, அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தினார்.

குஷ்பு!

(1 / 7)

குஷ்பு!

குஷ்புவின் அரசியல் வாழ்க்கை குறித்து பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் வி தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.அவர் பேசும் போது, “ குஷ்பு ஒரு மகாராஷ்டிர முஸ்லிம் பெண். இவர் நடிப்பதற்காக பெங்களூர் வந்த போது தமிழ் தயாரிப்பாளர் ஒருவரின் கண்ணில் படுகிறார். அவர்தான் இவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தி வைக்கிறார். கன்னடத்தைப் பொறுத்தவரை அங்குள்ள நடிகர் நடிகைகளுக்குதான் மக்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.   

(2 / 7)

அதனால் குஷ்புவால் அங்கு பெரிதாக சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் தமிழுக்கு வந்தார். தமிழில் இயக்குநர் பி வாசுதான் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.  குஷ்பு ஜோடி சேர்ந்த பெரும்பான்மையான கதாநாயகர்கள் அரசியல் பாதிப்பு உள்ளவர்களாக இருந்தார்கள். இதனால் அப்பொழுதே குஷ்பு, இறுதியாக நம் தஞ்சம் அடையப்போவது அரசியலில் தான் என்பதை முடிவு செய்து, அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தினார்.   

(3 / 7)

முதற்கட்டமாக திமுகவுடன் குஷ்பு நெருக்கமாகிறார். கலைஞருக்காக பொது மேடைகளில் பிரச்சாரம் செய்தார். இதனிடைய குஷ்புவுக்கும், திமுகவுக்கும் ஒரு உரசல் ஏற்படுகிறது.   

(4 / 7)

காரணம் என்னவென்றால், எந்த ஒரு பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, பணத்தை கொடுக்க வேண்டும் என்று குஷ்பு கண்டிஷன் போடுகிறார். இதனையடுத்து கலைஞரும் ஸ்டாலினும் அவரை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் என்று சொல்ல, குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு தாவி விட்டார். குஷ்புவால் அங்கும் பெரியளவு சோபிக்க முடியவில்லை.   

(5 / 7)

இதனையடுத்து அவர் ஆளும் கட்சியான பாஜகவுடன் இணைந்தார். குஷ்புவை பொருத்தவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ பாஜகவில் மாறிவிடலாம் என்று திட்டம் தீட்டினார். 

(6 / 7)

ஆனால் அது முடியவில்லை. காரணம் பாஜகவை பொறுத்தவரை, அங்கு பார்ப்பன பெண்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும்.தற்போது அவர் வைத்திருக்கும் தேசிய மகளிர் அணி உறுப்பினர் பதவியானது அவருக்கு பொருளாதார ரீதியாக எந்த ஒரு பயனையும் தராது.” என்று பேசினார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்