வாயு பிரச்னை, மூட்டு வலி போக்கும் அற்புத வீட்டு மருந்து..அன்னாசி பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்
Star Anise Benefits: உணவுகளில் சுவையை மெருகேற்ற பயன்படும் அன்னாசி பூ, ஆயுர்வேதத்தில் மருந்து பெருளாக கருதப்படுகிறது. மூட்டு வலி, வாயு தொல்லை, பூஞ்சை தொற்று போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட இவை உதவுகின்றன
(1 / 6)
உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா பொருள்களில் ஒன்றாக அன்னாசி பூ இருந்து வருகிறது. பிரியாணி மற்றும் அசைவ குழம்பு வகைகளில் இடம்பெறும் இன்றியமையாத பொருளாக இவை இருக்கின்றன. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அது பற்றி தெரிந்து கொள்ளலாம்
(2 / 6)
எட்டு முதல் பத்து அன்னாசி பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அதிகாலையில் குடித்து வந்தால், பல வகையான உடல்நல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது
(3 / 6)
வயிற்று உப்புசம் மற்றும் வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பூ டீயை அருந்தினால் நிவாரணம் பெறலாம்
(4 / 6)
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்த பூவை நன்கு கொதிக்க வைத்து தேனுடன் கலந்து டீயாக பருகலாம். இதன் மருத்துவ குணங்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. வைரஸ் எதிர்ப்பு பண்புகள் பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன
(5 / 6)
பருவகால நோய்த்தொற்றுகள் தொண்டை புண் மற்றும் சளி உற்பத்தியை ஏற்படும். இந்த அன்னாசி பூவை டீயாக தயார் செய்து பருகுவதால் உடலில் தங்கியிருக்கும் சளி நீங்கும். அத்துடன் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும்
மற்ற கேலரிக்கள்