Thanjavur: தஞ்சை பொிய கோயில் பற்றிய இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா?
- Thanjai Brihadeeswarar Temple: தஞ்சை பெரிய கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
- Thanjai Brihadeeswarar Temple: தஞ்சை பெரிய கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
(1 / 9)
ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில் 1004 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டில் முடிவடைந்தது. கோயிலில் முதலில் வருவது மராட்டிய நுழைவாயில், இரண்டாவது கேரளாந்தகன் நுழைவுவாயில், அடுத்து ராஜராஜன் நுழைவாயில் அதனைத் தொடர்ந்து நந்தி மண்டபம் அமைந்துள்ளன.(Gettyimages)
(2 / 9)
இங்குள்ள நந்தி, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலை வடிவமாகும். இது 13 அடி நீளமும், 9 அடி உயரமும் கொண்ட சிலை.(Gettyimages)
(3 / 9)
தஞ்சை பெரிய கோயிலின் தல விருட்சமாக வன்னி மரமும், தலத் தீர்த்தமாக சிவகங்கைத் தீர்த்தமும் விளங்குகின்றன. விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியாக கட்டுமானத்துறையில் வளர்ச்சி காணாத சமயங்களில் சுமார் 1000 ஆண்டுகள் முன்னதாக அப்போது சோழ அரசராக விளங்கிய அருள்மொழி வர்மன் என்ற ராஜ ராஜ சோழன் இக்கோயிலை கட்டினார்.(Gettyimages)
(4 / 9)
தஞ்சைப் பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயிலின் பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சந்நிதியில் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். (Gettyimages)
(5 / 9)
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், உலகின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஒரு ரகசிய வழிப்பாதையும் உள்ளது. இது அரண்மனை சிறைச்சாலைக்கு செல்லும் என தகவல்கள் தொிவிக்கின்றன. (Gettyimages)
(6 / 9)
தமிழின் உயிர் எழுத்துக்கள் 12 என்பதைக் குறிக்கும் வகையில் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடியாகவும், தமிழின் மெய் எழுத்துக்கள் 18 என்பதைக் குறிக்கும் வகையில் லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடியாகவும், தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்பதைக் குறிக்கும் வகையில் கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடியாகவும், தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 அடியாகவும் நிர்மாணித்து இருப்பது உலகில் வேறு எங்குமே காண இயலாத சிறப்பு ஆகும்.(Gettyimages)
(7 / 9)
இந்த கோயிலின் மிக முக்கியச் சிறப்பு, கோயில் கோபுரத்தின் நிழலான நண்பகல் நேரத்தின் உத்திராயணத்தில் தரையில் விழாது.இன்று வரையும் இதன் பின்னணி விஞ்ஞானிகள், பொதுமக்கள் என அனைவருக்குமே பிரமிக்க வைக்கும் மர்மமாகவே உள்ளது.(Gettyimages)
(8 / 9)
கிட்ட தட்ட 3 கோடி உள்ளூர்வாசிகள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தஞ்சை பெரிய கோயிலை ஆண்டுதோறும் பார்வையிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.(Gettyimages)
மற்ற கேலரிக்கள்