Umbrella Day 2023: உலக குடை தினம் இன்று - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
- உலக குடை தினமான இன்று (பிப்.10) அது குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
- உலக குடை தினமான இன்று (பிப்.10) அது குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
(1 / 7)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்தத் தினம் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது.
(2 / 7)
அம்பர்லா என்ற ஆங்கில வார்த்தை லத்தீன் மொழி சொல்லான "umbra"-- லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.
(3 / 7)
தமிழர்களும், சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்தி இருப்பதை வரலாற்று தரவுகள் பறைசாற்றுகின்றன. எகிப்தும் குடையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
(4 / 7)
மன்னர்கள் உயர் வகுப்பினர் மட்டுமே பயன்படுத்தி வந்த குடையை வியாபார பொருளாக மாற்றி அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆங்கிலேய வியாபாரி ஜோனாஸ் ஹான்வே. 1750 களில் குடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
(5 / 7)
உலகின் முதல் அதிகாரப்பூர்வ குடை கடை ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் லண்டனில் 1830-களில் ஆரம்பிக்கப்பட்டது.
(6 / 7)
1852-ல் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் குடைகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் தற்போதைய வடிவத்தை கண்டுபிடித்தார்.
மற்ற கேலரிக்கள்