Indonesia Flood: திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 58 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
(1 / 8)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.(AFP)
(2 / 8)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. (AFP)
(3 / 8)
மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.(AFP)
(4 / 8)
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள தானா டாடரில் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்புக் குழுவினர் சுமந்து செல்கின்றனர்.(AP)
(5 / 8)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலையின் சரிவுகளில் பெய்த கனமழை மற்றும் குளிர்ந்த லாவா மற்றும் சேறு ஆகியவை திடீர் வெள்ளப்பெருக்கைத் தூண்டியதால் பலர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்(AFP)
(6 / 8)
இந்த ட்ரோன் படம், இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள தானா டாதரில் திடீர் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டிடங்களைக் காட்டுகிறது.(AP)
(7 / 8)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை நீரில் மூழ்கின. 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.(REUTERS)
மற்ற கேலரிக்கள்