Indian Hockey in Olympics: ‘செம.. செம..’-ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது இப்படிதான்!
- Hockey India: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 'பி' பிரிவில் நியூசிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பெல்ஜியம் காரணமாக, இந்தியாவுக்கு காலிறுதி தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

(1 / 5)
இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. அப்போது காலிறுதி இடம் உறுதி செய்யப்படவில்லை. அதன்பிறகு, பெல்ஜியம் மற்றும் அர்ஜென்டினா வெற்றிகள் அடுத்த கட்டத்திற்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தன. (PTI)
(2 / 5)
செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்ய உதவியது.(Photo by Mauro PIMENTEL / AFP)(AFP)
(3 / 5)
நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்கியது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா ஆன நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது.(REUTERS)
(4 / 5)
காலிறுதி நம்பிக்கையுடன் இந்திய அணி, தனது கடைசி குரூப் பி போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.(PTI)
மற்ற கேலரிக்கள்