நான்கு தொடர் வெற்றி..சீன மகளிர் அணியை ஊதி தள்ளிய இந்திய மகளிர்! ஆசிய சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி
- India vs China, Womens Asian Champions Trophy 2024: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
- India vs China, Womens Asian Champions Trophy 2024: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
(1 / 5)
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், சமீபத்தில் நடந்து முடிந்ச பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சீனா மகளிர் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்திலும் இந்திய மகளிர் வெற்றி பெற்றுள்ளது
(2 / 5)
இந்தியா மகளிர் 3-0 என்ற கோல் கணக்கில் சீனா மகளிர் அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் இரண்டு பாதியில் கோல் எதுவும் அடிக்காமல் இருந்தது. இதன்பின் இடைவேளையை அடுத்து மூன்றாவது பாதியில் இந்திய மகளிர் 2 கோல் அடித்தது. கடைசி பாதியில் இந்திய அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. போட்டி முழுவதும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சீனா மகளிர் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் இந்திய மகளிர் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்
(3 / 5)
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில், சங்கீதா அடித்த கோல் மூலம் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து 37வது நிமிடத்தில் செலிமா அணியின் இரண்டாவது கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தீபிகா இந்தியா மகளிர் அணிக்கான மூன்றாவது மற்றும் கடைசி கோல் அடித்தார்
(4 / 5)
சீனா மகளிர் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், இந்தியா விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றியை பெற்றுள்ளது. இந்திய மகளிர் தற்போது 4 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. 6 அணிகள் கொண்ட லீக் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது
(5 / 5)
இந்திய மகளிர் தனது முதல் லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியா மகளிர் அணியை வீழ்த்தியது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா மகளிர் வீழ்த்தியது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆதிக்கம் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றது. இதன் பின்னர் நான்காவது போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் சீனா மகளிர் அணியை வென்றுள்ளது
மற்ற கேலரிக்கள்