தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bajaj Freedom Cng: இயற்கை எரிவாயுவில் இயங்கும் உலகின் முதல் மோட்டர் சைக்கிள்! விலை என்ன?வேறு என்ன ஸ்பெஷல் - முழு விவரம்

Bajaj Freedom CNG: இயற்கை எரிவாயுவில் இயங்கும் உலகின் முதல் மோட்டர் சைக்கிள்! விலை என்ன?வேறு என்ன ஸ்பெஷல் - முழு விவரம்

Jul 05, 2024 07:18 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 05, 2024 07:18 PM , IST

  • உலகின் முதல் சிஎன்ஜி மோட்டர் சைக்கிளாக பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி 125 சிசி இந்தியாவில் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. சுருக்கப்பட்ட இயற்கை வாயுவில் இயங்கும் பைக்குகளாக இந்த சிஎன்ஜி மோட்டர் சைக்கிள்கள் இருக்கின்றன.

பஜாஜ் ஃப்ரீடம் 125 என்பது உலகில் எங்கும் இல்லாத வகையில் சிஎன்ஜியில் இயங்கும் முதல் மோட்டார் சைக்கிளாக உள்ளது. இந்த பைக்குக்கு இந்திய சந்தையில் ரூ.95 ஆயிரம் தொடக்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரிகள் சேர்க்கப்படாத விலையாகும். மூன்று வேரியண்ட்களை கொண்டதாக பஜாஜ் ஃப்ரீடம் 125 உள்ளது

(1 / 6)

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, பஜாஜ் நிறுவன மேலாண்மை இயக்குநர் ராஜிவ் பஜாஜ் உள்பட நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இந்த பைக் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டனர்

(2 / 6)

பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜியில் இரட்டை எரிபொருள் விருப்பங்கள் உள்ளன. இந்த வசதி குறித்து வெகுவாக பாராட்டிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் வாகன இயக்க தேவைகளுக்காகவும், நாட்டில் வாகன உமிழ்வு அளவை குறைக்கவும் மாற்று எரிபொருள் ஆதாரங்களின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்

(3 / 6)

பஜாஜ் ஃப்ரீடம் மோட்டர் சைக்கிளில் இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் இரண்டு லிட்டர் சிஎன்ஜி சிலிண்டர் இருக்கை இடம்பிடித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் ஒருங்கிணைந்த சவாரி வரம்பு 330 கிமீ ஆகும்

(4 / 6)

மூன்று வேரியண்ட்களிலும், எழு வண்ணங்களிலும் இந்த மோட்டர் சைக்கிள் கிடைக்கிறது. டாப் இரண்டு வேரியண்ட்கள் முறையே ரூ. 1.10, ரூ. 1.05 லட்சம் ஆக உள்ளன. இந்த பைக், நாட்டிலுள்ள அனைத்து பயணிகள் பைக்குகளை காட்டிலும் மிகப்பெரிய இருக்கை கொண்டது என்ற பெருமையையும் பெற்றுள்ளது

(5 / 6)

பஜாஜ் ஃப்ரீடம் எல்இடி ஹெட்லைட் மற்றும் புளூடூத் இணைப்புக்கான ஆதரவு போன்ற பல வசதிகளுடன் வருகிறது. பஜாஜ் ஃப்ரீடம்க்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன்னரே மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் டெலிவரி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்