Vinayagar idols immersion: ஊர்வலமாக சென்று கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.
(1 / 9)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த மாதம் 31ம் தேதி விளாத்திகுளம், கோவில்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
(2 / 9)
இந்த சிலைகளை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக வாகனங்களில் கொண்டுவரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
(3 / 9)
அப்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
(5 / 9)
சிலைகளை எடுத்த வந்த வாகனங்களை போலீசார் குறிப்பு எடுத்து வைத்தனர். ஒவ்வொரு வாகனத்துக்கும் இரண்டு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
(6 / 9)
விநாயகர் சிலைகள் புறப்பட்ட இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரை போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
(8 / 9)
விளாத்திகுளத்தில் நிறுவப்பட்டிருந்த 64 விநாயகர் சிலைகள், கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 58 சிலைகள் என மொத்தம் 122 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
மற்ற கேலரிக்கள்