Sukra Yogam Luck: சுண்டி விடும் சுக்ர பகவான்.. கொட்டும் கோடிகள்.. யாருக்கு ஜாக்பாட் யோகம் வாய்க்கும்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sukra Yogam Luck: சுண்டி விடும் சுக்ர பகவான்.. கொட்டும் கோடிகள்.. யாருக்கு ஜாக்பாட் யோகம் வாய்க்கும்?

Sukra Yogam Luck: சுண்டி விடும் சுக்ர பகவான்.. கொட்டும் கோடிகள்.. யாருக்கு ஜாக்பாட் யோகம் வாய்க்கும்?

Nov 13, 2023 05:08 PM IST Kalyani Pandiyan S
Nov 13, 2023 05:08 PM , IST

எந்த லக்ன காரர்களுக்கு சுக்ர பகவான் எந்த மாதிரியான யோகத்தை கொடுப்பார் என்பதை பார்க்கலாம். 

சுக்கிரன் கொஞ்சம் சுயநலமாக செயல்படுவார். தன்னுடைய சந்தோஷம்தான் மிக முக்கியம் என்று அவர் நினைப்பார். அதனால்தான் அவரை நான்காம் இடத்தில் திக்பலம் அடைய வைக்கிறார்கள். வாகனம், வசதி, வாய்ப்புகள், பட்டம், பதவி, முதலீடுகள் உள்ளிட்டவற்றை குறிக்க கூடியது நான்காம் இடம். நான்காம் இடத்தில் திக்பலம் அடைய வைக்கக்கூடிய சுக்கிர பகவான் ஒருவரது வாழ்வியல் சுகங்கள் அனைத்தையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு கிரகமாகும்.  

(1 / 5)

சுக்கிரனுக்கு இரண்டு வீடுகள் உண்டு. கால புருஷனுடைய இரண்டாம் இடமும் ஏழாம் இடமும்.. ரிஷபம் மற்றும் துலாம் வீடுகள் அவரின் சொந்த வீடுகள்.ஆகையால் இந்த வீட்டின் வாயிலாக அவர்கள் பெறும் அமைப்பின் அடிப்படையில்தான் சுக்கிர பகவான் சுகத்தை கொடுப்பார்.மேஷ ராசி லக்னக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். வாழ்க்கைத் துணையின் மூலமாக, குடும்பத்தின் மூலமாக, குடும்ப வசதி வாய்ப்புகளின் மூலமாக, பொருளாதார தன்மைகளை வாரி வழங்குவார். கூட்டுத் தொழில் மூலமாக சமுதாயத்தின் மூலமாக, பொருளாதார வெற்றிகள் கிடைக்கும்.  

(2 / 5)

ரிஷப லக்னக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். லக்னாதிபதியாகவும், ஆறாம் அதிபதியாகவும் அவர் செயல்படுவார். நல்ல வேலையின் மூலமாக, அதிகாரம் மிக்க பதவிகளின் மூலமாக, சொத்து சுகம் சேர்ப்பதன் மூலமாக,  முயற்சிகளின் மூலமாக சுகங்களை வழங்குவார். கடன்களின் மூலமாக வாகனம்,வீடு, வசதி, வாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்துவார். போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமாக சுகம் அதிகரிக்கும். பகவானுக்கு இது நிலைத்த வீடு என்பதால், நீடித்த நிலையான சுகபோகங்களை அவர் தருவார்.  

(3 / 5)

மிதுன லக்னத்திற்கும், சுக்கிர பகவான் நான்காம் இடத்தில் இருக்கிறார். இவர் நீச்சமடைந்து திக் பலத்தை திரும்ப பெற்று இழந்த வலிமையை பெறுவார். அடிக்கடி வீடு மாற்றம் செய்து கொள்வதன் மூலமாக, ஊர் மாற்றம் செய்வதன் மூலமாக, பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதன் மூலமாக, பூர்வீக சொத்துக்களை விரையம் செய்வதன் மூலமாக, குழந்தைகள் பிறந்த பின்பு வெளிநாட்டில் வசிப்பதன் மூலமாக, நீண்ட தூர பிரயானங்களின் மூலமாக சுகம் கிடைக்கும். 

(4 / 5)

நன்றி: ஜோதிடர் ராம் ஜி! ( தகவல் உதவி)

(5 / 5)

நன்றி: ஜோதிடர் ராம் ஜி! ( தகவல் உதவி)

மற்ற கேலரிக்கள்