HONOR Magic V2: உலகின் மெலிதான ஸ்மார்ட்போன்! கேமரா, இதர சிறப்பு அம்சங்களின் முழு விவரம்
உலகின் மெலிதான ஸ்மார்ட்போன் என கூறப்பட்டு ஹானர் மேஜிக் வி2 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 9.9mm அளவு மெலிதாகவும், மிரட்டலான டிஸ்ப்ளே, அதிரடியான உள்ளடக்கம், கண்கவர் கேமரா போன்றவற்றை கொண்டிருக்கும் போனாக இருக்கிறது
(1 / 5)
கடந்த ஆண்டில் சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த போல்டபிள் போன் 9.9mm தடிமனாகவும், இதை விரித்தால் 4.7mm ஆகவும் போல்டபிள் போன் தொழில்நுட்பத்தில் புதிய தரநிலையை உருவாக்கியுள்ளது (HONOR)
(2 / 5)
போல்டபிள் போன்களில் ஹானர் மேஜிக் வி2 போன்களுக்கு போட்டியாக இருந்து வரும் கூகுள் பிக்சல் போல்டபிள் போன்கள் 12.1mm உள்ளது. போனை ஓபன் செய்தால் ஒன்பிளஸை காட்டிலும் 2 mm மெலிதானதாக ஹானர் போன்கள் இருப்பதாக ஆண்ட்ராய்டு ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த மெல்லிய வடிவமைப்பு வசதியான மற்றும் கச்சிதமான பயனாளர் அனுபவத்தை உறுதி செய்கிறது(HONOR)
(3 / 5)
ஹானர் மேஜிக் வி2 போன் டிஸ்ப்ளேயை பொறுத்தவரை வெளிப்புறத்தில் 6.43-இன்ச், 120Hz LTPO ஸ்கிரீன் கவருடன், துடிப்பான OLED டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. 20:9 விகிதம் மற்றும் 2,500 nits உச்ச பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. அன்போல்டு செய்தால் இதன் டிஸ்ப்ளே 7.92-இன்ச் LTPO OLED பேனலுடன், 120Hz ரெப்ரெஷ் ரெட், 1,600 nits உச்ச பிரகாசத்தை கொண்டிருக்கிறது. நானோ கிறிஸ்டல் கிளாஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது(HONOR)
(4 / 5)
இரட்டை 16MP செல்பி கிரேஸ் கேமராக்கள்,பிரதான கேமரா 50MP, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2.5x 20MP டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது(HONOR)
மற்ற கேலரிக்கள்