High Protein Lentils: உடல் எடை குறைப்புக்கு உதவும் பருப்பு வகைகள் லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  High Protein Lentils: உடல் எடை குறைப்புக்கு உதவும் பருப்பு வகைகள் லிஸ்ட் இதோ!

High Protein Lentils: உடல் எடை குறைப்புக்கு உதவும் பருப்பு வகைகள் லிஸ்ட் இதோ!

Oct 24, 2023 04:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 24, 2023 04:59 PM , IST

  • சைவ உணவுகளில் போதி புரதம் கிடைக்காது என்கிற நம்பிக்கை பலரிடமும் உண்டு. ஆனால் இந்த கட்டுக்கதையை பொய்யாக்கும் விதமாக புரதம் அதிகம் நிறைந்து, தசை வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை குறைப்புக்கும் உதவும் பருப்பு வகைகள் பற்றி பார்க்கலாம்

உளுத்தம் பருப்பு அல்லது உருட்டு பருப்பு: உளுத்தம் பருப்பு, பொதுவாக உருட்டு பருப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்திய உணவு வகைகளில் பிரபலமானதாக இருப்பதுடன், புரதம், நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. உளுத்தம் பருப்பின் உயர் புரத உள்ளடக்கம் எடை குறைப்புக்கும், தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலுக்கு தேவைப்படும் நிலையான ஆற்றலை வழங்குகிறது.  இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கிறது 

(1 / 4)

கடலை பருப்பு: புரதம் அதிகம் கொண்ட பருப்பு வகையாக இருந்து வரும் கடலை பருப்பில் உணவு நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்களும் உள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. ஆற்றல் அளவுகளை சீராக வைக்கிறது. பசியை குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது உணவாக இருக்கும்

(2 / 4)

துவரம் பருப்பு: இந்திய உணவு வகைகளில் புரத சத்துக்களின் ஆதாராமாக திகழும் துவரம் பருப்பில் அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. புரதம் தேவைப்படுவோருக்கான சிறந்த சைவ உணவாக துவரம் பருப்பு உள்ளது. இது தசை வளர்ச்சியை ஊக்குவித்து,  ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) குறைக்கவும் உதவுகிறது

(3 / 4)

பாசி பருப்பு: குறைந்த கொழுப்பு, அதிக புரதம் கொண்ட இந்த பருப்பு எளிதில் ஜீரணிக்கக்கூடியதாக உள்ளது. அத்தியாவசிய  ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள இந்த பருப்பு வயிறு நிரம்பிய முழுமை உணர்வை வழங்கி கலோரிகளை குறைக்க உதவுகிறது. குறைவான கொழுப்பு உள்ளடக்கம் எடை இழப்புக்கு ஏற்றதாக உள்ளது

(4 / 4)

மற்ற கேலரிக்கள்