Navratri Golu: வாழ்க்கையை மாற்றப் போகும் கொலு..எந்த படியில் என்ன பொம்மை வைக்கலாம்?
- நவராத்திரி துவங்கியுள்ள நிலையில், வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
- நவராத்திரி துவங்கியுள்ள நிலையில், வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
(1 / 9)
கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். கொலு படிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.(Getty Images)
(2 / 9)
நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. கொலு வைக்கும் போது 5, 7, 9 என்ற ஒன்றை எண்ணிக்கை கணக்கில் படி அமைக்கின்றனர். 9 படிகள் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும். நவராத்திரி துவக்க நாளன்று காலையில் கலச பூஜை செய்து மேல் படியில் வைத்து விட வேண்டும்.(Getty Images)
(3 / 9)
அடுத்து, ராமபிரான் வனவாசம் செய்ததை நினைவுபடுத்தும் விதமாக மலைகள், மரங்கள், செடி கொடிகளை அமைக்க வேண்டும். தொடர்ந்து கீழிருந்து மேலாக முதல் இரண்டு படிகளில் விசேஷமான தெய்வ மரங்களை அமைக்க வேண்டும். இவற்றுக்கு ஓரறிவுள்ள பிரதிமைகள் என்று பெயர்.
(4 / 9)
3-வது படியில் கரையான், எறும்பு, சிலந்தி உள்ளிட்ட சுறுசுறுப்பாக இயங்கும் மூன்றறிவு உயிரினங்களை வைக்கலாம்.
(5 / 9)
4-வது படியில் நான்கு அறிவுள்ள பறந்து சென்று தன் பணிகளை செய்கிற பறவை உள்ளிட்ட உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
(6 / 9)
6-வது படியில் ஆறறிவு படைத்த ஆன்மாக்களான மனித வடிவங்கள், அறிவை வெளிப்படுத்துகிற நாதஸ்வர வித்வான்கள், வீணை இசைக்கும் பெண்மணி, ஆடலரசிகள், நாட்டியக்கலை பெண்மணிகள் உள்ளிட்ட பொம்மைகளை வைக்கலாம்.
(7 / 9)
7-வது படியில் தவசீலர்கள், ஞானிகள், குருநாதர்கள், மகான்கள், அவதார புருஷர்களை வைத்து அவர்களின் உலக நலன்கள் குறித்து எடுத்துரைக்கும்படி மரியாதை செய்வதாக நினைக்க வேண்டும். 8-வது படியில் தெய்வ அவதாரங்கள், தசாவதாரம், கிருஷ்ண பரமாத்மாவின் அவதார வடிவங்கள், நவசக்திகள், அம்பாளின் வித்தியாசமான வடிவங்கள், கிராம தேவதைகள் அய்யனார், காளி மற்றும் துர்க்கை பொம்மைகளை வைக்கலாம்.
(8 / 9)
9-வது படியில் கலசத்தை நடிவில் வைத்து பூரண வடிவாய் சக்தி எழுந்தருளியுள்ளதாக நினைத்து சக்தியின் அவதாரங்களான பொம்மைகளை ஐந்துக்கு மேல் வைக்காமல் அழகுபடுத்த வேண்டும்.
மற்ற கேலரிக்கள்