தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Get Yoga From Lord Sukra

பிப்ரவரி மகரம்.. மார்ச் மீனம்.. சுக்கிரன் குறி.. பணமழை ராசிகள்

Feb 02, 2024 11:57 AM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 11:57 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களின் இங்கே காண்போம்.

நவகிரகங்களின் சுப கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன்.

(1 / 7)

இவர் செல்வம், செழிப்பு , ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வத்தை அள்ளித்தரும் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த பிப்ரவரி மாதம் மகர ராசிக்குள் நுழைகிறார். வரும் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 

(2 / 7)

உச்ச ராசியாக மீன ராசி திகழ்ந்து வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவான் பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றமும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

மீனத்தில் நுழைகின்ற சுக்கிர பகவானால் 12 ராசிகளுக்கும் சாதகமான சூழ்நிலை உண்டாக உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியிருக்கும். செல்வம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

கன்னி ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர உள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பணவரவு அதிகப்படுத்தும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஜாதகம் உண்டாகும். 

(6 / 7)

கடக ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துள்ளார். கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கக்கூடும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீரென்று அரசியல் பயணம் மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்