சனி அமர்ந்து கொட்டுகிறார்.. பணம் யோகத்தை பெறுகின்ற ராசிகள்
- Lord Saturn: சனி உச்சத்தில் நிறுத்தப் போகும் ராசிகளும் இங்கே காண்போம்.
- Lord Saturn: சனி உச்சத்தில் நிறுத்தப் போகும் ராசிகளும் இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் சனி பகவானுக்கு என தனி முக்கியத்துவம் உண்டு. சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும் திருவிழாவாகவும் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் இடமாற்றம் செய்தார்.
(2 / 6)
சனிபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இது பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். புதிதாக பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டில் பல ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(3 / 6)
மேஷ ராசி: இந்த புத்தாண்டில் உங்களுக்கு சனி பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(4 / 6)
ரிஷப ராசி: நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை சனி பகவான் உங்களுக்கு முடித்துக் கொடுப்பார். அசைக்க முடியாத சொத்துக்கள் உங்களை வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
கடக ராசி: சனிபகவான் சிறப்பான புத்தாண்டை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிறைவடையும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
(6 / 6)
சிம்ம ராசி: சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மிகப்பெரிய யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கின்ற வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்