பணம் கொட்டும் வரம் தரும் செவ்வாய்.. யோகத்தை பெறும் ராசிகள்
- Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தைப் பெறும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தைப் பெறும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார் இந்த ஆண்டின் முதல் முறையாக செவ்வாய் பகவான் உதயமாகியுள்ளார். இவருடைய செயல்பாடுகளால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. அனைத்து காரியங்களும் அணுகூலமாக நடக்கும். வெளிநாடு வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். விரும்பிய வேலைகள் கிடைக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பார். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்