கும்பத்தில் கூட்டணி சேர்ந்த சனி செவ்வாய்.. பணமழை கொட்டும் ராசிகள். அதிர்ஷ்ட ராஜயோகம் வருகிறது
- Transit of Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்தவர். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்துள்ளார்.
- Transit of Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்தவர். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்துள்ளார்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் வீரம், துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்தவர். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்துள்ளார்.
(3 / 6)
கும்ப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனியின் ராசியில் செவ்வாய் புகுந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
விருச்சிக ராசி: உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைத்துள்ளது. செவ்வாய் பகவான் உங்களுக்கு அதற்கு கொடுக்கப் போகின்றார். இவர் உங்களுடைய அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுடைய நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
(6 / 6)
தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் அதிகரிக்கும். சிறிய சேமிப்பு கூட உங்களுக்கு உதவியாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்