சனியை ஓட்டி அடிக்கும் சுக்கிரன்.. தாறுமாறாக சிக்கிய ராசிகள்.. 2025 முதல் ஜாக்பாட் உறுதி..!
- Sani and Venus: வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி அன்று சுக்கிரன் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். சுக்கிரன் சனி கூட்டணி ஒரு சில ராசிகளுக்கு 2025 முதல் யோகத்தை கொடுக்கப் போகின்றது.
- Sani and Venus: வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி அன்று சுக்கிரன் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். சுக்கிரன் சனி கூட்டணி ஒரு சில ராசிகளுக்கு 2025 முதல் யோகத்தை கொடுக்கப் போகின்றது.
(1 / 7)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
(2 / 7)
அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன் பகவான். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 7)
சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் ரிசபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(4 / 7)
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி அன்று சுக்கிரன் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். சுக்கிரன் சனி கூட்டணி ஒரு சில ராசிகளுக்கு 2025 முதல் யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழவு உள்ளது. இதனால் உங்களுக்கு 2025 முதல் யோகம் கிடைக்கப்போகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 7)
கும்ப ராசி: உங்கள் ராசியில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை முதல் வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(7 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு 2025 முதல் பண பலன்கள் கிடைக்கப் போகின்றன உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்