குரு பகவானின் ஆசி பெற்ற ராசிகள்.. பணக்கடலில் நனையும் ராசிகள் யார் யார்?.. வாங்க பார்க்கலாம்!
- Lord Guru: குருபகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பொற்காலத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru: குருபகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பொற்காலத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவான் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குருபகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பொற்காலத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும். நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்ற கேலரிக்கள்