பிப்ரவரி முரட்டு அடி.. சூரியன் செய்யும் சம்பவம்.. 3 ராசிகளுக்கு சிரமம்
- Sun Transit: சூரிய பகவானால் பிப்ரவரி மாதத்தில் சிக்கலை சந்திக்கப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.
- Sun Transit: சூரிய பகவானால் பிப்ரவரி மாதத்தில் சிக்கலை சந்திக்கப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் வழங்கி வருகிறார். நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார்.
(2 / 7)
அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சனி பகவான் பயணம் செய்து வரும் மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசியில் இணையப் போகின்றார். சூரிய பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல சனி மற்றும் சூரியன் இருவரும் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் சூரிய பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை இங்கே காண்போம்.
(5 / 7)
கடக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டிற்கு செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு உண்டாக வாய்ப்பு உள்ளது.
(6 / 7)
சிம்ம ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர உள்ளார். இவர் உங்களுடைய அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உடன் வேலை செய்யும் ஊழியர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அவ்வப்போது நம்பிக்கை அதிகரிக்கும். பல்வேறு விதமான திட்டங்களை தற்போது தள்ளி வைப்பது நல்லது.
(7 / 7)
விருச்சிக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை திசை திருப்பி சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை தராது.
மற்ற கேலரிக்கள்