விடைபெறுகிறார் டென்னிஸ் உலகின் ஜாம்பவான்..களிமண் களத்தின் ராஜா..ரஃபெல் நடால் நிகழ்த்திய அற்புத சாதனைகள் லிஸ்ட்
- டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவான் வீரராக இருந்து வரும் ரஃபேல் நடால் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனது வண்ணமயமான டென்னிஸ் வாழ்க்கையில் அவர் வெல்லாத கோப்பையே இல்லை. களிமண் மைதானங்களின் ராஜா என்று அழைக்கப்படும் டென்னிஸ் விளையாட்டின் லெஜண்ட் நவம்பர் மாதம் கடைசி போட்டியில் விளையாடுகிறார்
- டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவான் வீரராக இருந்து வரும் ரஃபேல் நடால் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனது வண்ணமயமான டென்னிஸ் வாழ்க்கையில் அவர் வெல்லாத கோப்பையே இல்லை. களிமண் மைதானங்களின் ராஜா என்று அழைக்கப்படும் டென்னிஸ் விளையாட்டின் லெஜண்ட் நவம்பர் மாதம் கடைசி போட்டியில் விளையாடுகிறார்
(1 / 5)
ரஃபேல் நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 19 முதல் 21 தேதிகளில் டேவிஸ் கோப்பையின் காலிறுதியில் நெதர்லாந்தை அவரது நாடு எதிர்கொள்கிறது. காயம் காரணமாக குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும், காலிறுதிக்கு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து காலிறுதியில் அல்கராஸுடன் தோளோடு தோள் நின்று போராடுவார்(AFP)
(2 / 5)
ரஃபேல் நடால் டென்னிஸ் உலகில் பலரால் நேசிக்கப்படும் வீரராக திகழ்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டார் வீரரான பெடரரின் வெற்றியை தனது அற்புத ஆட்டத்தால தடுத்து நிறுத்தினார். அப்போது முதலே டென்னிஸ் உலகினரால் நடாலின் போர்க்குணம் கவனிக்கதக்கதாக மாறியது (AFP)
(3 / 5)
கடந்த 2022இல் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனில், ரஃபேல் நடால் தனது 22வது கிராண்ட்ஸ்லாம் வென்றபோது, உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களில் ஒருவர் என்ற பெருமை பெற்றார். பெண்களில் மார்கரெட் கோர்ட் 24 கிராண்ட்ஸ்லாம் வென்று முதல் இடத்தில் இருக்கிறார். அந்த தொடருக்கு பின் காயம் காரணமாக நடால் மீண்டும் டென்னிஸ் பக்கம் திரும்பாமல் நீண்ட காலம் இருந்தார். இவர் விளையாடாத காலகட்டத்தில் மற்றொரு நட்சத்திர வீரரான ஜோகோவிச், நடாலின் சாதனையை பின்னுக்கு தள்ளி அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்(AFP)
(4 / 5)
கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளின் அடிப்படையில் ஜோகோவிச் அவரை விட இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருந்தாலும், உலக அளவில் அதிக முறை பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்ற பெருமை நடாலிடம் உள்ளது. களிமண் மைதானங்களில் அவரது வெற்றி வானளாவ அளவில் உயர்ந்துள்ளது. 14 பிரெஞ்ச் ஓபன்களை வென்று சாதனை படைத்திருக்கிறார். அது மட்டுமின்றி, நடால் 2005 முதல் 2007 வரை தொடர்ந்து 81 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்(PTI)
(5 / 5)
ரஃபேல் நடால் 24 வயதில் ஒரே ஆண்டில் நான்கு பெரிய கோப்பைகளை வென்றிருக்கிறார். ஸ்பெயின் நட்சத்திரமான இவர் தனது பல வருட டென்னிஸ் வாழ்க்கையில் களிமண் மைதானத்தில் 9 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார். நான்கு முறை பிரெஞ்சு ஓபனில் ஒரு செட்டையும் இழக்காமல் வென்றிருக்கிறார். ஒரு செட்டையும் இழக்காமல் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற உலகின் முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார். டென்னிஸ் வாழ்க்கையில் கோல்டு ஸ்லாம் வென்ற மூன்றாவது டென்னிஸ் வீரர் என்ற பெருமை பெற்றவராக உள்ளார். அதாவது நான்கு கிராண்ட்ஸ்லாம்கள் தவிர, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்(AFP)
மற்ற கேலரிக்கள்