Online Temple Prasadam: வீட்டில் இருந்தே கோயில்களின் பிரசாதம் பெறுவது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்!
- பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது பற்றி இங்கு காணலாம்.
- பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது பற்றி இங்கு காணலாம்.
(1 / 8)
பிரசாதத்தை பெற விரும்புவோர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் 'திருக்கோயில்' மொபைல் செயலி மூலமாகவோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யலாம்.
(2 / 8)
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in எனும் இணையதளத்திற்கு செல்லவும். இந்தப் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் பட்டியல் இருக்கும்.
(3 / 8)
இந்தப் பக்கத்தின் வலது பக்கத்தில் அஞ்சல் வழி பிரசாதம் எனும் ஒரு OPTION இருக்கும். அதை க்ளிக் செய்கையில், 49 கோயில்களின் பிரசாதங்களை அஞ்சல் வழி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
(4 / 8)
சென்னை பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்ரணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுத சுவாமி கோயில் உட்பட பல திருக்கோயில்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
(5 / 8)
பக்தர்கள் விரும்பும் கோயிலை தேர்வு செய்து, முன்பதிவை க்ளிக் செய்யவும். பின்பு அஞ்சல் வழி பிரசாதம் 15 கிராம் என கொடுக்கப்பட்டுள்ளது. விபூதி 5 கிராம், குங்குமம் 5 கிராம், சுவாமி அம்பாளின் புகைப்படம் 5 கிராம் என மூன்றும் சேர்த்து 15 கிராம் என்ற கணக்கில் இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான பிரசாதம் இடம்பெற்றிருக்கும்.
(6 / 8)
வாங்குபவர்களின் பெயர், ஊர், அடையாள அட்டை உட்பட முக்கிய தகவல்களை பதிவிட்டு, இதற்கான கட்டணம் ரூ.30 என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் இரண்டு பிரசாதம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
(7 / 8)
Packing கட்டணம், விநியோக கட்டணம் என மூன்றையும் சேர்த்து பணம் செலுத்துவது போல் இருக்கும். UPI, DEBIT அல்லது CREDIT CARD மூலமாக பணம் செலுத்தி ஆர்டர் செய்துகொள்ளலாம், Cash On Delivery வசதி கிடையாது.
(8 / 8)
ஒவ்வொரு கோயில்களுக்கும் பிரசாதங்களின் எடை மற்றும் பிரசாதத்தில் இருக்கும் பொருட்களை பொருத்து பண மதிப்பு மாறும். அதன் பின்பு CAPTCHA-வை சரிசெய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை டிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த பின் ஆர்டரை உறுதிசெய்த பிறகு பதிவு செய்தவரின் பெயர் செல்போன் எண், இ-மெயில், தொகை ஆகியவற்றை சரிசெய்து, Make Payment-ஐ Click செய்யவும். Payment-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ஒரு Confirmation Page வரும், அதை சேமித்து வைத்து கொள்ளவும்.
மற்ற கேலரிக்கள்