Healthy Morning Breakfast: காலை நேரத்தில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியம், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இவைதான்
- நாள்தோறும் காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவதால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் நலம் பெறும். இதனால் அன்றைய பொழுதிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம்
- நாள்தோறும் காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவதால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் நலம் பெறும். இதனால் அன்றைய பொழுதிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம்
(1 / 6)
நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதற்கு காலை உணவு முக்கியமானதாக உள்ளது. எனவே நாம் சாம்பிபடும் காலை உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய நிறைந்த உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
(2 / 6)
முட்டை: காலை உணவாக முட்டை சாப்பிடுவது சிறந்த தேர்வாக உள்ளது. புரத சத்துகளின் ஆதாரமாக இருக்கும் முட்டை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைக்க உதவுகிறது. முட்டையை வேக வைத்து காலையில் சாப்பிடலாம். தேவைப்பட்டால் ஆம்லேட் அல்லது பெரியலாக செய்து சாப்பிடலாம்
(3 / 6)
முளைகட்டிய பயறு: ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பிரதானாக முளைகட்டிய பயறு உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன், ஆற்றல் இழப்பை தடுக்கிறது
(4 / 6)
ஓட்ஸ்: நார்ச்சத்து மிக்க உணவாக இருக்கும் ஓட்ஸை, காலை உணவாக சாப்பிட்டால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் பேனி பாதுகாக்கப்படும்
(5 / 6)
அடை தோசை: கடலை மாவு, பருப்பு வகைகளால் தயார் செய்யப்படும் அடை தோசை உடலுக்கு தேவையான புரதம், அடிப்படை ஊட்டச்சத்துகளை தருகிறது
மற்ற கேலரிக்கள்