Hair Care Tips: தலைமுடி உதிர்வு முதல் நிறம் மாற்றம் வரை..அளவுக்கு அதிகமாக ஹென்னா பயன்படுத்துவதால் வரும் பக்க விளைவுகள்
Henna Side Effects: தலைமுடி பராமரிப்பு நிபுணர்கள் பல்வேறு காரணங்களுக்காக தலைமுடிக்கு ஹென்னா பவுடர் பயன்படுத்த மறுக்கின்றனர். இதை செய்வதன் மூலம், உங்களை அறியாமலேயே தலைமுடிக்கு அதிக சேதம் ஏற்படும் என்று கூறுகிறார்கள்
(1 / 6)
நரை முடியை மறைக்க பலரும் இயற்கை நிவாரணியாக மருதாணியைப் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்துள்ளார்கள். இப்படி செய்வதால் தலைமுடி ஆரோக்கியத்தில் மருத்தாணி பல்வேறு நன்மைகள் தருவதாக கூறுவதுண்டு. அதேசமயம் தலை முடி பராமரிப்பு என்று வரும்போது, மருதாணியில் இருந்து தயார் செய்யப்பட்டும் ஹென்னா பொடியா வல்லுநர்கள் பயன்படுத்த முற்றிலும் மறுக்கிறார்கள்(freepik)
(2 / 6)
ஹென்னாவில் லாசன் என்ற சாயம் உள்ளதாக கூறப்படுகிறது. லாசன் ஹெனாடோனிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. லோஷன் கெரட்டின் எனப்படும் புரதத்துடன் இது வினைபுரிகிறது. இதுதான் ஹென்னா சிவப்பு நிறமாக மாறுவதற்கு உதவு புரிகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஹென்னாவை அதிகமாக தலைமுடியில் பயன்படுத்துவதால், முடி அதிகமாக உலர்ந்து, உதிர்ந்து விடும் அபாயம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது(freepik)
(3 / 6)
அதிகப்படியாக ஹென்னா பயன்பாடு தலைமுடியில் நீரிழப்பை ஏற்படுத்தி முடியை முற்றிலும் உயிரற்றதாகவும், உலர்ந்ததாகவும், உடையக்கூடியதாகவும் மாற்றிவிடுக்கூடும். இது படிப்படியாக முடியை மிகவும் எரிச்சலடையச் செய்யும், சீப்பு வைத்து சீவுவதற்கு கடினமாகிவிடும்
(4 / 6)
தலைமுடியில் முடியில் ஹென்னா அதிகமாகப் பயன்படுத்துவதால் அதன் நிறம் மிகவும் ஆழமாக ஊடுருவி, நீங்கள் விரும்பும் வேறு எந்த முடி நிறத்தையும் தலைமுடியில் பெற முடியாத அளவில் மாற்றவிடக்கூடும். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் தலைமுடி தோற்றமானது வித்தியாசமாக மாறக்கூடும்
(5 / 6)
தலைமுடியில் தொடர்ந்து ஹென்னா உபயோகிப்பது முடி உதிர்தல் பிரச்னையை அதிகரிக்கும். இது முடியின் வேர்களில் இருந்து இயற்கையான எண்ணெய்களை உறிஞ்சி, அவற்றை உலர செய்து பலவீனமாக்குகிறது
மற்ற கேலரிக்கள்