Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!-friendship day 2024 top 5 friendships that rocked politics from periyar rajaji to modi amit shah - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!

Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!

Aug 04, 2024 07:20 PM IST Kathiravan V
Aug 04, 2024 07:20 PM , IST

  • Friendship Day 2024: அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுப்படுகின்றது. அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஏனெனில் காலசூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறும் என்பதால் அரசியலில் நிரந்தரமாக ஒன்றாக பயணிப்பவர்கள் குறைவு. அப்படி ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை அரசியலில் பெரும் தாக்கத்தை டாப் 5 அரசியல் நட்புக்கள் குறித்து நண்பர்கள் தினமான இன்று பார்க்கலாம்.

(1 / 6)

பெரியார் - ராஜாஜிஅரசியல் களத்தில் கருத்து முரண்கள் கடல் அளவு இருந்தாலும் தனிப்பட்ட நட்பில் கடுகளவு இடைவெளி கூட வராமல் பார்த்துக் கொண்ட நட்பில் பெரியார் - ராஜாஜி ஆகியோரின் நட்பு மிக முக்கியமானது. ஈரோட்டில் செல்வந்தர் வீட்டு பிள்ளையாக இருந்த பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ராஜாஜி. இருப்பினும் வகுப்புவாரி பிரதிநித்துவம் போன்ற கொள்கைகள் காரணமாக ராஜாஜியை எதிர்த்தே தனது அரசியலை பெரியார் செய்தார். இவர்களுக்குள் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளும், கடும் விமர்சனங்களும் இருந்தாலும், இவர்களின் நட்பு என்றும் ஆழமாக வேறூன்றி இருந்தது. “எனக்கு ராஜாஜி உண்மையான நம்பிக்கைக்காரராகவும் நண்பராகவும் ஆக வேண்டும் என்பதும் ராஜாஜியின் ஆசை. அதனால், நான் அவர் நட்பில் மூழ்கிவிட்டேன்” என குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஆம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி வெளியான குடிஅரசு இதழில் எழுதி உள்ளார். ராஜாஜி மரணத்தின் போது பெரியார் சிந்திய கண்ணீரே இவர்களின் நட்புக்கு சான்று.

(2 / 6)

கலைஞர் கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன்"முதலில் நான் மனிதன்,இரண்டாவது நான் அன்பழகன்,மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்,நான்காவது அண்ணாவின் தம்பி,ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்"-இந்த வார்த்தைகள் மறைந்த திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உதிர்த்தவை.கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது பிரண்ட்ஸ்ஷிப் என்றுமே மூழ்காத ஷிப் என்று சொல்லலாம். 1942ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவராக க.அன்பழகன் இருந்த காலத்தில் திருக்குவளையில் கலைஞர் கருணாநிதி நடத்திய இயக்க நிகழ்ச்சியில் இவர்களின் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அன்று தொடங்கிய இவர்களின் நட்பு என்றும் இணை பிரியாமல் இருந்தது என்று சொல்லலாம்.அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலைஞரை தளபதியாக ஏற்றுக் கொள்வேனே தவிர தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறியவர் க.அன்பழகன்.இந்த சம்பவம் தொடர்பாக தனது நெஞ்சுக்கு நீதி சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள கலைஞர் கருணாநிதி, “பேராசிரியர் நெஞ்சில் பட்டதை சொல்லக்கூடியவரே தவிர பிளவு எனும் நஞ்சைக் கழகத்தில் கலந்திட கனவிலும் நினைக்காதவர். என்னிடம் மிகைப்படச் சொன்னவர்களை அமைதிப்படுத்தினேன். இதனை நான் எழுதும்போது இந்தக் கட்சியில் நான் தலைவர், பேராசிரியர் பொதுச்செயலாளர். நாங்கள் இருவரும் பிரியாதவர்கள், பிரிக்கப்பட முடியாதவர்கள். தலைவர் பதவி, ஏற்றுள்ள பொறுப்புகள் சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களே தவிர, எங்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் இருப்பதாக நான் என்றுமே எண்ணியதில்லை. இடுக்கண் கலையும் நட்பின் இலக்கணமாக இதய உணர்வுகளால் ஒன்றிக் கலந்துவிட்ட ஒரு உடன்பிறப்பாக இந்த தமிழனம் காக்க, உற்ற படைக்களனாக விளங்குகின்ற அவருக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்குவது எனக்கு மிகப்பெரும் கடமையாயிற்று.” என குறிப்பிட்டு உள்ளார். இவர்களின் இறப்பு தேதியிலும் கூட சில ஒற்றுமையில் உள்ளன. கலைஞர் கருணாநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதியும், பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7ஆம் தேதியும் மறைந்தனர் என்பது கூடுதல் தகவல்.

(3 / 6)

தமிழக அரசியல் வரலாற்றில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நட்புகள் பட்டியலில் ஜெயலலிதா - சசிகலா ஆகியோரின் நட்பு மிக முக்கியமானது. 1984ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கு சசிகலாவுக்கு உற்ற தோழியாக இருந்து வருகின்றார். ஜெயலலிதாவின் முழுமையான நம்பிக்கை பெற்ற நபரான சசிகலா, ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவரோடு டெல்லி செல்லும் அளவுக்கு அவருடைய நம்பிக்கை வளர்ந்தது.எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டபோது ஜெயலலிதா அவரது தலைமாட்டில் நின்று கொண்டிருந்தார். அவரை சுற்றி வளைத்து பாதுகாத்தது தங்களது குடும்பத்தினர்தான் என பிற்காலத்தில் அளித்த பேட்டியில் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்து இருந்தார். 1988ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவின் போயர் தோட்டத்திலேயே நிரந்தரமாக தங்கத் தொடங்கிய சசிகலா 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது அவருக்கு எல்லாமுமாக மாறினார். ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அதிமுகவினர் அழைக்கத் தொடங்கினர். ஆட்சிக்கட்டிலில் இருக்கும் போது கோட்டை தொடங்கி ஆட்சியை இழந்த பின்னர் சிறைக்கட்டிலுக்கு செல்லும் வரை ஜெயலலிதாவின் நிகழலாக பின் தொடர்ந்தார் சசிகலா.

(4 / 6)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அன்பில் பொய்யாமொழிவாழையடி வாழையை போல் தலைமுறை தலைமுறையாக தொடரும் நட்பாக கலைஞர் குடும்பத்திற்கும், அன்பில் குடும்பத்திற்கும் இடையே தொடர்பும் நட்பை கூறலாம். கலைஞர் கருணாநிதிக்கும், அன்பில் தர்மலிங்கத்திற்கும் ஏற்பட்ட நட்பு, அவர்களது வாரிசுகளான மு.க.ஸ்டாலின், அன்பில் பொய்யாமொழியையும் தாண்டி தற்போது உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை தொடர்கின்றது. திமுக இளைஞர் அணியை மு.க.ஸ்டாலின் கட்டியெழுபிய காலகட்டத்தில் அவருக்கு தோளோடு தோள் நின்றவர் அன்பில் பொய்யாமொழி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று எல்லோரும் தலைவர் என்று அழைத்தாலும் அன்றே தலைவர் என்று அழைத்தவர் அன்பில் பொய்யாமொழி.தனது வாழ்கையை பாதித்த மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக தனது நண்பன் அன்பில் பொய்யாமொழியின் மரணம் உள்ளது என முதலமைச்சர் முக.ஸ்டாலினே குறிப்பிட்டு இருந்தார். அன்பில் பொய்யாமொழி மட்டும் இன்று உயிருடன் இருந்து இருந்தால், திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருந்து இருப்பார் என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியாது.

(5 / 6)

நரேந்திர மோடி-அமித்ஷாதேசிய அரசியலில் இன்றளவும் தாக்கம் செலுத்தும் நட்பாக பிரதமர் நரேந்திர மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது நட்பு உள்ளது. அமித் ஷாவை விட 14 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி மூத்தவர். ஆனாலும் இவர்களின் நட்பு மிகவும் ஆழம் ஆனது. 1984ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். ஊழியராக பிரதமர் மோடி இருந்த போது அமித் ஷா உடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. இவர்கள் இணைவரும் இணைந்து குஜராத்தில் பாஜகவுக்கு அடித்தளத்தை உருவாக்கினர். 1995ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. 2001 ஆம் ஆண்டு தொடங்கி 13 ஆண்டுகள் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் 12க்கும் மேற்பட்ட இலாகாகளை கவனித்து வந்த பவர்புல் மினிஸ்டர் ஆக அமித்ஷா இருந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளர் ஆன அமித்ஷா பெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மோடியை வாரணாசி தொகுதியில் போட்டியிட வியூகம் வகுத்ததில் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது. வரலாற்றில் மோடியின் வெற்றிகள் குறித்து எழுத நினைப்பவர்கள் அமித்ஷாவை தவிர்த்து எழுத முடியாது என்பதே இவர்களின் நட்பு எவ்வளவு பலமானது என்பதை அறியலாம். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்