ஜெயலலிதாவின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம்! எம்ஜிஆரின் அம்மு! தமிழ்நாட்டின் அம்மா வரை!
- இந்தியாவின் பெண் ஆட்சியாளர்களில் முக்கியமான ஒருவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இன்று அவரது 8 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரின் சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
- இந்தியாவின் பெண் ஆட்சியாளர்களில் முக்கியமான ஒருவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இன்று அவரது 8 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரின் சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
(1 / 6)
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக ஜொலித்து, பின் எம்.ஜி.ஆரின் வழியைப் பின்பற்றி அரசியல் பிரவேசம் செய்து. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரவிய புகழைக் கொண்ட சிறந்த ஓர் ஆளுமை தான் ஜெயலலிதா அவர்கள். தமிழ்நாட்டில் 6 முறை முதலமைச்சராக இருந்து, எதிர்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தார்.
(2 / 6)
1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றார்.
(3 / 6)
1989 இல் அதிமுகவின் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் திமுகவிற்கு எதிராக அமைக்கப்பட்ட வலுவான கட்சியாக அதிமுக திகழ்ந்தது. ஜெயலலிதாவின் அமோக வெற்றியினால் பிரிந்து இருந்த அதிமுக கட்சி ஒன்றிணைந்தது. இதற்கு முக்கிய காரணமாக ஜெயலலிதா இருந்தார்.
(4 / 6)
1991,2001,2002, 2011 மற்றும் 20216 என இந்த ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 6 முறை தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். அத்தனை முறைகளிலும் மத்தியில் ஆளும் அரசுகளுடன் பாரபட்சம் இல்லாமல் தமிழ்நாட்டிற்கான உரிமைகளை கேட்டு வாங்கினார். மேலும் இவரது தைரியமான சில அரசியல் முடிவுகளுக்காக இவரை பலர் இரும்பு பெண்மனி எனவும் அழைத்தனர்.
(5 / 6)
சிறு வயது முதலே நாட்டியத்தில் ஆர்வம் கொண்ட ஜெயலலிதா 1965 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெண்ணிறாடை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அன்றைய திரையுலகின் இருபெரும் ஆளுமைகளான சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார். இவர் மொத்தமாக சுமார் 127 படங்களில் நடித்துள்ளார். இதில் 28 படங்களில் எம்.ஜி. ஆருடன் இணைந்து நடித்துள்ளார்.
(6 / 6)
தமிழ்நாட்டின் மக்களுக்கு அம்மாவாக இருந்த ஆகப்பெரும் ஆளுமை கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். இவரது மரணத்திற்கு பின்னர் உறுதியாக இருந்த அதிமுக கட்சி பலக் கூறுகளாக பிரிந்தது. இன்று வரை அந்த பிரிவில் இருந்து அதிமுக மீளவில்லை. அதிமுக போன்ற கட்சிகளின் பலம் தான் தேசிய கட்சிகள்தமிழகத்திற்குள் நுழைந்து விடாமல் தடுக்கும் எனப் பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடித்த குழப்பங்களும் அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்ய ஒரு காரணமாகும்.
மற்ற கேலரிக்கள்