Income Tax Budget 2024: வருமான வரி முறையில் மாற்றம்.. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலன்னா எவ்ளோ வரின்னு பாருங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Income Tax Budget 2024: வருமான வரி முறையில் மாற்றம்.. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலன்னா எவ்ளோ வரின்னு பாருங்க

Income Tax Budget 2024: வருமான வரி முறையில் மாற்றம்.. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலன்னா எவ்ளோ வரின்னு பாருங்க

Jul 23, 2024 01:09 PM IST Manigandan K T
Jul 23, 2024 01:09 PM , IST

  • New income tax: நிதியமைச்சர் சீதாராமன் பட்ஜெட் 2024 இல் புதிய வரி முறையை அறிவித்துள்ளார். ரூ .3-7 லட்சத்திற்கு 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை அறிய தொடர்ந்து படிங்க.

2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது முன்னுரிமைகளை பட்ஜெட் கொண்டுள்ளது என்று அவர் தனது உரையில் கூறினார். Photographer: Prakash Singh/Bloomberg

(1 / 8)

2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது முன்னுரிமைகளை பட்ஜெட் கொண்டுள்ளது என்று அவர் தனது உரையில் கூறினார். Photographer: Prakash Singh/Bloomberg(Bloomberg)

கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பது அரசாங்கத்தின் கொள்கை இலக்காக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

(2 / 8)

கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பது அரசாங்கத்தின் கொள்கை இலக்காக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.(President of India-X)

வருமான வரி விதிப்பில் ஏதாவது மாற்றம் இருக்குமா என பெரிய எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்களிடையே எழுந்து வந்தது. இந்நிலையில், வருமான வரி விதிப்பில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. (PTI Photo/Manvender Vashist Lav)

(3 / 8)

வருமான வரி விதிப்பில் ஏதாவது மாற்றம் இருக்குமா என பெரிய எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்களிடையே எழுந்து வந்தது. இந்நிலையில், வருமான வரி விதிப்பில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. (PTI Photo/Manvender Vashist Lav)(PTI)

தனிநபர் வருமான வரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.75000 மாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். (PTI Photo)

(4 / 8)

தனிநபர் வருமான வரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.75000 மாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். (PTI Photo)(PTI)

புதிய வருமான வரி விதிப்பு படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் வருமான வரி கிடையாது. (ANI Photo)

(5 / 8)

புதிய வருமான வரி விதிப்பு படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் வருமான வரி கிடையாது. (ANI Photo)(President of India-X)

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை நீங்கள் ஆண்டு வருமான ஈட்டுபவராக இருந்தால் இனி 5 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.

(6 / 8)

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை நீங்கள் ஆண்டு வருமான ஈட்டுபவராக இருந்தால் இனி 5 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.(REUTERS)

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவராக இருந்தால் 10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.

(7 / 8)

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவராக இருந்தால் 10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.(REUTERS)

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதேநேரம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் என்றால் 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.

(8 / 8)

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதேநேரம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் என்றால் 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.

மற்ற கேலரிக்கள்