Yashasvi Jaiswal: இந்திய கிரிக்கெட்டில் 75 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- Yashasvi Jaiswal Record: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பொறுப்புடன் பேட் செய்த இந்திய அணியின் ஓபனர் யஷஸ்வி ஜெயஸ்வால் அரைசதமடித்து அவுட்டார். இந்த அரைசதம் மூலம் வரலாற்று சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார்
- Yashasvi Jaiswal Record: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பொறுப்புடன் பேட் செய்த இந்திய அணியின் ஓபனர் யஷஸ்வி ஜெயஸ்வால் அரைசதமடித்து அவுட்டார். இந்த அரைசதம் மூலம் வரலாற்று சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார்
(1 / 5)
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமாக பேட் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் ருசி மோடியின் 75 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்
(2 / 5)
95 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த ஜெயஸ்வால், 8 பவுண்டரிகளை விளாசினார். 118 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இது யஷஸ்வி ஜெயஸ்வாலின் 5வது அரைசதமாகும். அவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார்
(3 / 5)
இந்திய மண்ணில் 6 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால். இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் முதல் அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமடித்த வீரராக உள்ளார்
(4 / 5)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஸ்டம் மோடி தனது முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 63, 112, இரண்டாவது டெஸ்டில் 80, மூன்றாவது டெஸ்டில் 87, நான்காவது டெஸ்டில் 56, ஐந்தாவது டெஸ்டில் 86 ரன்கள் அடித்தார். ஒரே சீரிஸில் விளையாடி 5 டெஸ்ட் போட்டிகளிலும் அரைசதமடித்த வீரர் என்ற சாதனை புரிந்தார்
(5 / 5)
இவரை போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 80, இரண்டாவது டெஸ்டில் 209, மூன்றாவது டெஸ்டில் 214, நான்காவது டெஸ்டில் 73, ஐந்தாவது டெஸ்டில் 57 ரன்கள் அடித்து ருசி மோடியின் சாதனையை சமன் செய்தார். தற்போது வங்கதேசத்துக்கு எதிராக சென்னை டெஸ்டில் சதமடித்திருப்பதன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்
மற்ற கேலரிக்கள்